பட்டொளி வீசிய பாகிஸ்தான் கொடி; பாஜக ஆளும் மாநிலத்தில்..பரபரப்பு!

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் – சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா என்ற பெயரில் நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரத்துக்கு கொண்டாட்டங்கள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி, எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்கும் வகையில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் பயணிகள் மற்றும் பயணிகள் கொண்டு வரும் உடமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலம், குஷிநகரில் வாலிபர் ஒருவர் தனது வீட்டின் முன்பாக, பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

ரஜினி பேசிய அரசியல் – யாருடைய பிளான்?

இதையடுத்து, தெரயா சுஜான் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியபோது, பெதுபர் முஸ்தகில் கிராமத்திலுள்ள ஒரு வீட்டு மொட்டை மாடியில் பாகிஸ்தான் தேசிய கொடி ஏற்றப்பட்டது தெரிய வந்தது.

மோடி மீண்டும் பிரதமர் ஆக முடியாது?; பாஜ ஷாக்..உருவாகும் மெகா கூட்டணி!

இதை தொடர்ந்து குறிப்பிட்ட வீட்டில் இருந்து பாகிஸ்தான் தேசிய கொடியை போலீசார் அகற்றினர். பின்னர், அந்த வீட்டில் இருந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், குடும்பத்தினர் தடுத்தும் கேட்காமல் பாகிஸ்தான் தேசியக் கொடியை வாலிபர் ஏற்றியது தெரிந்ததால், அவரை போலீசார் கைது செய்தனர். இன்று (ஆகஸ்ட் 14) பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.