சென்னை
:
மாநாடு
படத்தின்
பிரம்மாண்ட
வெற்றியை
தொடர்ந்து
கெளதம்
மேனன்
இயக்கிய
வெந்து
தணிந்தது
காடு
படத்தில்
நடித்து
முடித்துள்ளார்
சிம்பு.
இந்த
படம்
செப்டம்பர்
15
ம்
தேதி
ரிலீஸ்
ஆக
உள்ளது.
இதைத்
தொடர்ந்து
டைரக்டர்
ஓபிலி
என்.கிருஷ்ணா
இயக்கும்
பத்து
தல
படத்தில்
நடித்து
வருகிறார்
சிம்பு.
பிரியா
பவானிசங்கர்
லீட்
ரோலில்
நடித்து
வரும்
இந்த
படத்தில்
சிம்பு
கேங்ஸ்டர்
ரோலில்
நடித்துள்ளார்.
கெளதம்
கார்த்திக்,
கெளதம்
மேனன்,
தீஜே,
கலையரசன்,
ரெடின்
கிங்ஸ்லே
உள்ளிட்டோர்
நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைத்துள்ள
பத்து
தல
படத்தில்
சிம்பு
பிஸியாக
நடித்து
வந்த
நிலையில்,
அவரது
தந்தை
டி.ராஜேந்தருக்கு
உடல்நல
பாதிப்பு
ஏற்பட்டதால்,
அவரது
சிகிச்சைக்காக
அமெரிக்கா
சென்று
விட்டார்
சிம்பு.
கிட்டத்தட்ட
ஒரு
மாத
இடைவேளைக்கு
பிறகு
சமீபத்தில்
தான்
இந்தியா
திரும்பினார்.
இதனால்
பாதியில்
நிறுத்தப்பட்டிருந்த
பத்துதல
படத்தின்
ஷுட்டிங்
மீண்டும்
கர்நாடக
மாநிலம்
பெல்லாரியில்
துவங்கப்பட்டது.
இந்நிலையில்
பெல்லாரியில்
நடத்தப்பட்டு
வந்த
பவர்பேக்
ஷுட்டிங்
முடிக்கப்பட்டு
விட்டதாக
சமீபத்தில்
அப்டேட்
வெளியிட்டனர்.
இந்நிலையில்
பத்து
தல
படத்தின்
அடுத்தகட்ட
ஷுட்டிங்
இன்று
சென்னையில்
துவங்கப்பட்டு
விட்டதாக
அடுத்த
அப்டேட்டை
வெளியிட்டுள்ளனர்.
இன்றைய
ஷுட்டிங்கில்
கெளதம்
கார்த்திக்
கலந்து
கொண்டுள்ளார்.
இன்னும்
2
நாட்களில்
சிம்புவும்
இந்த
ஷுட்டிங்கில்
கலந்து
கொள்ள
உள்ளதாக
சொல்லப்படுகிறது.
சென்னையில்
இன்று
துவங்கப்பட்டுள்ள
ஷுட்டிங்
இன்னும்
இரண்டு
வாரங்கள்
வரை
நடக்கும்
என
சொல்லப்படுகிறது.
அதே
சமயம்,
ஹீரோயின்
பிரியா
பவானிசங்கர்,
விடுமுறையை
கழிக்க
ஐரோப்பா
சென்றுள்ளார்.
அவர்
திரும்பி
வந்ததும்
அவர்
நடிக்கும்
காட்சிகள்
படமாக்கப்பட
உள்ளதாக
சொல்லப்படுகிறது.
படத்தின்
ஷுட்டிங்கை
செப்டம்பரில்
முடிக்க
படக்குழு
திட்டமிட்டுள்ளதாக
சொல்லப்படுகிறது.
சிம்பு
திரும்பி
அமர்ந்திருப்பது
போன்ற
போட்டோக்கள்
மட்டுமே
படக்குழு
சார்பில்
வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில்
சிம்பு
பெரிய,
அடர்த்தியான
தாடியுடன்
இருக்கும்
அவரின்
லேட்டஸ்ட்
போட்டோக்கள்
சில
சோஷியல்
மீடியாவில்
பரவி
செம
வைரலாகி
வருகிறது.
இந்த
லுக்கில்
தான்
பத்து
தல
க்ளைமாக்சில்
சிம்பு
தோன்ற
போகிறாரா?
இது
பத்து
தல
படத்திற்காக
வளர்த்த
தாடியா
அல்லது
மறுபடியும்
நிஜமாவே
தாடி
வளர்க்க
துவங்கி
விட்டாரா?
என
ரசிகர்கள்
கேட்டு
வருகின்றனர்.