பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு: முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை..!

மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு நிகழ்ச்சியில் நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அதனையடுத்து, மதுரை விமான நிலையம் நோக்கி வந்தபோது அவரது காரை வழி மறித்த பாஜகவினர் ” பாரத் மாதா கி ஜே” என்று கோஷமிட்டு கொலை வெறியுடன் அந்த காரை நோக்கி பாய்ந்தனர்.

பின்னர் அந்த கும்பலில் இருந்த பெண் ஒருவர் ஏற்கனவே திட்டமிட்டபடி அவர் அணிந்திருந்த செருப்பை கையில் எடுத்து வைத்திருந்த நிலையில் அமைச்சர் கார் மீது வீசினார். மேலும், பாஜகவினர் அசிங்கமான வார்த்தைகளால் அமைச்சரை திட்டி தீர்த்தனர். கார் அங்கிருந்து புறப்பட்ட பின்னரும் பின்னாடியே ஓடி கலாட்டாவில் ஈடுப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு பிறகு ட்வீட் போட்டிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அந்த பெண்ணின் ஒத்த செருப்பை எனது ஊழியர்கள் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளனர். வேண்டுமானால் வந்து பெற்றுக்கொள்ளலாம்” என கூறியிருந்தார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின், வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு உண்மையாக அஞ்சலி செலுத்த நினைத்து இருந்தால் அவரது வீடு தேடி சென்று இறுதி வணக்கம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால், தேசிய கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பை வீசி விடுதலை நாளில் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள்.

அடாவடியான செயல்கள் மூலம் தங்களின் தரம் என்ன என்பதையும், தங்களின் தேசபக்தி எத்தனை போலி என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அரசின் மரபார்ந்த நடவடிக்கைகள் நடைபெறும் இடத்தில் அரசியல் விளம்பரம் தேடும் வகையில் பாஜகவினர் குவிந்தனர். போகிற வழியில் ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்துவது போல் அரசியல் லாபம் தேட பாஜக முயற்சி செய்துள்ளது. தேசிய கொடியை அவமதித்து கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்படக்கூடாது என்ற கவனத்துடன் திமுகவும் அரசும் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து சமூக விரோதிகளை கொண்டு அரசியல் வீணர்கள் செயல்பட்டால் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது. தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இது தமிழ்நாடு! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது” என இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.