சென்னை: மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.
புஷ்பா 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அல்லு அர்ஜுன் உடன் மோதப் போகிறார் விஜய்சேதுபதி என தகவல்கள் கடந்த சில வாரங்களாக டிரெண்டாகி வந்தன.
இந்நிலையில், புஷ்பா 2 உள்ளிட்ட எந்த படத்திலும் விஜய்சேதுபதி வில்லனாக கமீட் ஆகவில்லை என்கிற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
புஷ்பாவுக்கே முயற்சி
புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமார் பகத் ஃபாசிலுக்கு முன்னதாக விஜய்சேதுபதியைத் தான் அந்த ரோலில் நடிக்க அணுகினார் என்றும் ஆனால், கால்ஷீட் காரணமாக விஜய்சேதுபதி நடிக்க மறுத்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. புஷ்பா படம் வெளியாகி தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து இடங்களிலும் பட்டையைக் கிளப்பி 350 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியது.
புஷ்பா 2வுக்கும் நோ
புஷ்பா 2வில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்கிற தகவல் பரவியதும் விஜய்சேதுபதி ரசிகர்கள் செம ஹேப்பி ஆனார்கள். ஆனால், தற்போது புஷ்பா 2வில் விஜய்சேதுபதி நடிக்கவில்லை என்கிற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுவரை புஷ்பா 2 படத்தில் நடிக்க விஜய்சேதுபதி சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் பரவும் தகவல்கள் வதந்தி என்றும் விஜய்சேதுபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போ அந்த 100 கோடி
ஜவான் படத்துக்கு விஜய்சேதுபதி 30 கோடி வாங்குகிறார். புஷ்பா 2 படத்துக்கு 25 கோடி, இந்தியன் 2 படத்துக்கு 20 கோடி, பாலகிருஷ்ணா படத்துக்கு 20 கோடி என்றெல்லாம் உலா வரும் தகவல் கூட உண்மையில்லையா என விஜய்சேதுபதி ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.
இது மட்டும் தான்
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்து வரும் ஜவான் படத்தில் மட்டும் தான் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க கமீட் ஆகி உள்ளார் என்றும் தெலுங்கு திரையுலகில் அவர் இப்போதைக்கு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதான் காரணமா
புஷ்பா 2 படத்தில் பகத் ஃபாசில் மற்றும் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிக்க உள்ள நிலையில், விஜய்சேதுபதி தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனுக்கு மட்டும் மனோஜ் பாஜ்பாய் ரோலில் நடிக்க வேண்டும் என்றும், இந்தியில் மனோஜ் பாஜ்பாய் நடிப்பார் என்கிற கண்டிஷன் அவருக்கு செட்டாகாத நிலையில், இந்த படத்திற்கு ஓகே சொல்லலாமா? இல்லை வேண்டாமா? என்கிற நிலையில் அவர் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.