அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனையானது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது எனலாம்.
ஏற்கனவே அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனையால், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் பல பிரச்சனைகள் வெடித்தது. பல கட்ட வர்த்தக தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் இது உலகளாவிய பிரச்சனையாக மாறும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர்.
இந்த நிலையில் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்தெடுக்கப்பட்ட பிறகு, இப்பிரச்சனைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்தன.
சும்மாவே இருந்து எப்படி சம்பாதிப்பது.. ஜப்பான் இளைஞரின் அசத்தல் திட்டம்..!
பல பிரச்சனைகள்
எனினும் அந்த காலகட்டத்திலேயே சீனா மீது பல்வேறு வர்த்தக தடைகள், சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை, சீன ஆப்களுக்கு தடை, பங்கு சந்தையில் இருந்து டீலிஸ்ட் என பல நடவடிக்கைகள் இருந்தன. இப்படி பல பிரச்சனைகளுக்கு தற்போது தான் சுமூக நிலை ஏற்பட ஆரம்பித்தது. எனினும் அமெரிக்கா தாய்வானுக்கு சப்போர்ட் செய்யும் நிலையில், அதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என சீனா பகிரங்கமாக எச்சரித்தது.
மீண்டும் தடையா?
சீனாவின் இத்தகைய மிரட்டல்கள் வந்த சில வாரங்களில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது வந்துள்ளது. அப்படி என்ன நடவடிக்கை, இதனால் சீனாவுக்கு என்ன பிரச்சனை வாருங்கள் பார்க்கலாம். சீனாவின் முன்னணி எரிசக்தி நிறுவனம் உள்பட, அரசுக்கு சொந்தமான 5 சீன நிறுவனங்கள், அமெரிக்க பங்கு சந்தையில் இருந்து இம்மாத இறுதிக்குள் நீக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நிறுவனங்கள்
சீனா லைஃப் இன்சூரன்ஸ், பெட்ரோ சீனா, சினோபெக், அலுமினியம் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா மற்றும் சினோபெக் ஷாங்காய் பெட்ரோகெமிக்கல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த லிஸ்டில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5 நிறுவனங்களும் தான் NYSEல் இருந்து நீக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ன காரணம்?
இது அமெரிக்காவில் குறைந்த டர்ன்ஓவர் மற்றும் அதிக நிர்வாக சுமை மற்றும் அதிக செலவுகள் என பல பிரச்சனைக்கு மத்தியில் தான் இந்த நிறுவனங்கள் வெளியேறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சீனா செக்யூரிட்டி கண்காணிப்பு குழுவான சீனா செக்யூரிட்டீஸ் ரெகுலேட்டரி கமிஷன், நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்படுவதும், அதில் இருந்து வெளியேறுவதும் இயல்பானது என்று தெரிவித்துள்ளது.
தணிக்கை பிரச்சனை
அமெரிக்க கண்காணிப்பு குழுவினை 3 ஆண்டுகளுக்கு தணிக்கை செய்ய அனுமதிக்க தவறினால், நிறுவனங்களை பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற முடியும் என விதியானது அமெரிக்காவில் உண்டு.
ஆனால் சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாக தங்களது நிறுவனங்களின் மீதான அமெரிக்க தணிக்கையை நிராகரித்து வருகிறது. இந்த சூழலில் தான் இந்த 5 நிறுவனங்களும் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்ட திருத்தம்
இதற்காக சட்ட திருத்தம் கொண்டு வர ஏற்கனவே சீனா மொழிந்துள்ளது. இந்த திருத்தம் அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களை ஆய்வு செய்ய அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களை அனுமதிக்கும். எனினும் தற்போதைக்கு இது அமலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5 Chinese companies may deist from new york stock exchange
5 Chinese companies may deist from new york stock exchange/மீண்டும் அமெரிக்கா- சீனா இடையே ஆரம்பித்த பிரச்சனை.. அச்சத்தில் உலக நாடுகள்!