நாட்டின் முன்னணி பங்கு சந்தை முதலீட்டாளரும், பில்லியனருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தனது 62 வயதில் காலமானார்.
இந்தியாவின் முன்னணி பங்கு சந்தை முதலீட்டாளரான இவர், இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படுகிறார். தனது கல்லூரி காலத்திலேயே பங்கு சந்தையில் அதிக நாட்டம் கொண்டவர்.
1985 காலகட்டத்தில் வெறும் 5000 ரூபாயுடன் பங்கு சந்தையில் களமிறங்கியவர், இன்று அதன் மதிப்பு பல ஆயிரம் கோடி. அது மட்டும் அல்ல சமீபத்தில் ஆகாசா ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனத்தியுனையும் தொடரங்கினார். இந்த நிறுவனத்தின் தொடக்க விழாவில் இவர் கலந்து கொண்டது இவரின் கடைசி பொது நிகழ்வாகவும் உள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவும் இன்சைடர் டிரேடிங் சர்ச்சைகளும்.. இதோ ஒரு பார்வை!

பல்வேறு பிரச்சனைகள்
ஏற்கனவே பல்வேறு உடல் நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, கடைசியாக சீறுநீரகம் முற்றிலும் செயலிழந்து உயிழந்துள்ளதாக மருத்துவமனை அறிக்கைகள் கூறுகின்றன.
கடந்த சில தினங்களாகவே சுவாசப்பிரச்சனை இருந்து வந்ததாகவும்,. இதற்கிடையில் இன்று காலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் அவர் காலமாகிவிட்டார் என்று மருத்துவமனை தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ராகேஷ் ஜுன் ஜுன்வாலா குடும்பம்
1960ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பிறந்த ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, சிஏ படித்தவர். அவரது மனைவி பெயர் ரேகா ஜுன் ஜுன்வாலா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு.
ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் தந்தை வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்தவராவர்.

காளைகளின் ராஜா
பங்கு சந்தையில் காளையாக மேலேறி வந்த ராகேஷ் காளைகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். கடந்த ஆகஸ்ட் 7 அன்று தான் ஆகாசா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தினையும் தொடங்கினார். இதுவே அவர் கலந்து கொண்ட கடை பொது நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஆகாசா ஏர்லைன்ஸ்
ராகேஷ் தனது போர்ட்போலியோவில் பற்பல பங்குகளை ரேர் எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தின் மூலம் வணிகம் செய்து வருகின்றார். இவர் சொந்தமாக ஏர்லைன்ஸ் வணிகத்தினை செய்ய நினைத்தவருக்கு, பலரும் இந்த சமயத்தில் எதற்காக இந்த வணிகம், இந்ததுறையில் பல சவால்கள் நிறைந்துள்ளன என கூறியபோதும், நான் தோல்விகளை சந்திக்க தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

அன்றும் இன்றும்
வருமான வரி துறை அதிகாரியின் மகனான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது அதனை பற்றி பேசுவராம். 1985ல் 100 டாலர்கள் முதலீட்டில் தனது முதலீட்டு பாதையை தொடங்கியவர், இன்று இந்தியாவே அறியும் ஒரு முதலீட்டாளார்கள். இவர் முதலீடு செய்ய ஆரம்பித்த அந்த காலகட்டத்தில் பிஎஸ்இ இன்டெக்ஸ் 150 புள்ளிகளாக இருந்த நிலையில், தற்போது 60,000 புள்ளிகள் என்ற லெவலில் காணப்படுகிறது.

சொத்து மதிப்பு
இந்தியாவின் வாரன் பஃபெட், பிக் புல், பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் ஜுன்ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு 5.8% பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் சுமார் 46,000 கோடி ரூபாயாகும். இந்தியாவின் 48வது பணக்காரராவர்..

ஆரம்ப முதலீடு
1985ல் வெறும 5000 ரூபாயி மூதலீடு செய்த இவரின் இன்றைய போர்ட்போலியோ மதிப்பு சுமார் 26,000 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இவரின் போர்ட்போலிபோலியோ பங்குகளில் டாடா குழும பங்குகளுக்கு என்றுமே தனி இடம் உண்டு. குறிப்பாக ஸ்டார் ஹெல்த், டைட்டன், ராலிஸ் இந்தியா, எஸ்கார்ட்ஸ், கனரா வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பலவும் அடங்கும். ஜூன் காலாண்டு நிலவரப்படி இவரின் போர்ட்போலியோவில் 47 பங்குகள் இருந்தன.

மிகப்பெரிய லாபம்
1986ல் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வாங்கிய டாடா டீ பங்கின் விலை 43 ரூபாயாகும். இதன் பிறகு மூன்றே மாதங்களில் 143 ரூபாயாக அதிகரித்தது. வெறும் மூன்று ஆண்டுகளில் இவரின் முதலீடு 20 – 25 லட்சம் ரூபாயாக அதிகரித்தது.
Rakesh Jhunjhunwala no more: Top 10 things to look out for
Rakesh Jhunjhunwala no more: Top 10 things to look out for/யார் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!