ரஷ்ய வான்பரப்பில் மிதந்த இந்திய தேசிய கொடி: வீடியோ காட்சிகள்!



  • திங்கள்கிழமை இந்தியாவின் 75வது சுகந்திர தின கொண்டாட்டம்.
  • ரஷ்ய வானில் பறந்த இந்திய தேசிய மூவர்ண கொடி

இந்தியாவின் 75 வது சுகந்திர தின விழாவை முன்னிட்டு ரஷ்ய வான்பரப்பில் இந்திய தேசிய கொடியை மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் பறக்கவிட்டுள்ளது.

வரும் திங்கள்கிழமை இந்தியா தனது 75வது சுகந்திர தினத்தை கொண்டாட உள்ளது.

அதனைப் போற்றும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவரையும் அவர்களது இல்லத்திலும், சமூக ஊடகப் பக்கத்திலும் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

அதனடிப்படையில் இந்திய பிரபலங்கள் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களின் சுயவிவர புகைப்படத்தில் இந்திய தேசிய கொடியை வைத்தனர்.

மேலும் பலர் தங்களது தேசப் பற்றை வெளிப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியை தங்களது வீட்டில் பறக்கவிட்டனர்.

இந்தநிலையில், உக்ரைன் மீதான போரால் உலக நாடுகளின் கடுமையான எதிரிப்பை சந்தித்து வரும் ரஷ்யாவின் வான்பரப்பில் இந்தியாவின் மூவர்ண கொடியை அதிகாரிகள் பறக்கவிட்டுள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய சுகந்திர தின கொண்டாத்தின் அங்கமாக ரஷ்யாவின் வான் பரப்பில் பாராசூட் மூலம் தேசிய மூவர்ண கொடியை பறக்கவிட்டுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: யெரெவன் வணிக வளாத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து: பரபரப்பு காட்சிகள்

இதுத் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தள பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.