இந்திய பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் பிரபல பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளார். பல்வேறு தலைவர்களும் முதலீட்டாளர்களும் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்கு சந்தை முதலீடுகளில் மிக பிரபலமானவர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.
ஆனால் இன்சைடர் டிரேடிங் செய்ததாக செபி மூலம் கண்கானிக்கப்பட்டு வந்தவர். இன்சைடர் டிரேடிங் என்றால் என்ன? எதற்காக இவர் கண்கானிக்கப்பட்டு வந்தார்.
நிதி துறையில் அழியாத நிகழ்வுகள்.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இன்சைடர் டிரேடிங் என்றால் என்ன?
பங்கு சந்தையில் பட்டியிடப்பட்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருப்பவர், அந்த நிறுவனத்தின் பங்கு விலையை நிர்ணயிக்கக் கூடிய அல்லது பாதிக்கக் கூடிய சில விஷயங்கள் என உள்ளிட்ட சில விஷயங்களை நிறுவன அதிபர்களோ, மேலிருந்து கீழ் வரை உள்ள நிறுவன ஊழியர்களோ, அவர் தம் உறவினர்களோ, நண்பர்களோ, அல்லது நிறுவனம் வெளியில் தொடர்பு வைத்திருக்கும் தணிக்கை நிறுவனம் இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்கள் இவர்களுக்கு கிடைக்கும் விவரங்களை வைத்து அவர் முன் கூட்டியே பங்குகளை வாங்கி லாபம் பார்ப்பது அல்லது பங்குகளை விற்று நஷ்டம் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடவது இன்சைடர் டிரேடிங் என்றும் கூறப்படுகிறது.

செபி கண்கானிப்பு
இப்படி ஒரு பிரச்சனையில் தான் ராகேஷ் ஜூன் ஜூன்வாலாவையும் கண்கானிக்கப்பட்டார். ராகேஷ் ஜூன் ஜூன்வாலா அவருக்கும் குடும்பத்திற்கும் சொந்தமான கல்வி நிறுவனமான ஆப்டெக் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளில் உள்வர்த்தகம் செய்ததாக செபியால் விசாரிக்கப்பட்டார்.

ஜுன்ஜுன்வாலா குடும்பத்தினரிடமும் விசாரணை
பங்குதாரர்களாக இருக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ரமேஷ், எஸ் தமானி மற்றும் இயக்குனர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில குழு உறுப்பினர்களையும் பங்கு சந்தை கட்டுப்பாட்டாளர் விசாரித்து வருவதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின. ராகேஷ் ஜூன் ஜூவாலவைத் தவிர, அவரது மனைவி ரேகா, அவரது சகோதரர் மற்றும் அவரது மாமியார் சுஷிலா தேவி குப்தா உள்ளிட்ட சிலர் செபியால் விசாரனைக்கு அழைக்கப்பட்டனர். மும்பையில் உள்ள ஒழுங்குமுறை ஆணையத்தில் குறைந்தது இரண்டு மணி நேரம் இந்த விசாரணை நடந்ததாகவும் கூறப்பட்டது.

ஜியோமெட்ரிக்கில் பங்கில் சர்ச்சை
ஜியோமெட்ரிக்கில் பங்கு கடந்த ஏப்ரல் 2016-ல் ஜியோமெட்ரிக் என்கிற நிறுவனத்தை ஹெச்சிஎல் நிறுவனம் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாவதற்கு முன்பே, ஜுன்ஜுன்வாலாக்கு தனிப்பட்ட முறையில் இது தெரிய வர, தன்னுடைய பங்கை ஜியோமெட்ரிக் லிமிடெட் நிறுவனத்தில் 19% அதிகரித்துக் கொண்டாதாக சர்ச்சை வெடித்தது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 43 ஜியோமெட்ரிக் லிமிடெட் நிறுவன பங்குகளுக்கு 10 ஹெச்சிஎல் நிறுவன பங்குகள் வழங்கியுள்ளார்கள்.

சட்ட விரோதமாக லாபம்
இதன் மூலம் ஜுன்ஜுன்வாலாக்கு பெரிய லாபம் சட்ட விரோதமாக கிடைத்திருப்பதாக அப்போது செபி விசாரித்தது. இந்த விசாரணைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் தான் ஜுன்ஜுன்வாலா, அந்த குற்றச் சாட்டை ஒப்புக் கொள்ளும் விதத்தில் 2.48 லட்சம் ரூபாய் அபராதத் தொகையாக செபி அமைப்புக்கு செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மொத்த முதலீடு
பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 26,835 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. தனது ஆப்டெக் நிறுவனத்தில் 24% பங்குகளை வைத்துள்ள ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பெரிய நிறுவனங்களிலும் முதலீட்டை பரவலாக செய்து வந்தவர்.
Rakesh Jhunjhunwala and Insider Trading Controversies
Rakesh Jhunjhunwala and Insider Trading Controversies/ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவும் இன்சைடர் டிரேடிங் சர்ச்சைகளும்.. இதோ ஒரு பார்வை!