பிரபல பங்கு சந்தை முதலீட்டாளரும், ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார்.
தற்போது அவரின் வயது 62 ஆகும். இன்று காலையிலேயே கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரை பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் அதற்குள் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவருக்கு சிறுநீரகம் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இதே மருத்துவமனையில் சமீபத்தில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
பெரும் சோகம்.. இந்திய பங்கு சந்தையின் தந்தை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்

ஒரே வாரம் தான்
ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மறைவு முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த வாரம் தான் ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தினை தொடங்கினார். அதன் சேவைகள் தொடங்கப்பட்டு 1 வாரமே ஆன நிலையில், இன்று இல்லை என்பது அவரின் குடும்பத்தினர் மட்டும் அல்ல, ஊழியர்கள் மத்தியிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு இழப்பாக உள்ளது.

தொடக்க விழாவுக்கே வீல் சேரில் தான் வந்தார்
எனினும் இந்த தொடக்க விழாவிற்கே ஜுன்ஜுன்வாலா வீல் சேரில் தான் வந்தார். அவருக்கு ஏற்கனவே பல்வேறு உடல் நல பிரச்சனைகள் இருந்த நிலையில், இன்று அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன்ஜுன்வாலாவின் மறைவு என்பது ஈடு செய்ய முடியாதது. தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சருமான பியூஸ் கோயல் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

விதியால் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்
ஜுன்ஜுன்வாலா விமான நிறுவனத்தினை ஆரம்பித்தபோதே, விமான போக்குவரத்து துறையானது மோசமான நிலையில் உள்ளது. இதில் ஏன் இறங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு, தோல்வியை சந்திக்க நான் தயாராகி விட்டேன் என கூறியிருந்தார்.
தோல்வியை சந்திக்க தயாராக இருக்கிறேன் என கூறியவர் , இன்று விதியால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

தரத்தில் சமரசம் வேண்டாம்
இந்த தொடக்க விழாவில் பேசிய ஜுன்ஜுன்வாலா, தனது நிறுவனம் ஆரம்பிக்கும் முன்பே தங்களது பொருளை கவனிக்கும்படி போட்டியாளர்களை கிண்டல் செய்துள்ளார். மேலும் ஆகாசா நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் குறைந்த கட்டண சேவையானது தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், பயணிகளின் வசதியிலோ அல்லது தரத்திலோ எந்த சமரசமும் இருக்க கூடாது என்றும், சிக்கனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

எவ்வளவு பங்கு?
LCCயில் ஜுன்ஜுன்வாலா 40% மேலான பங்குகளில் 35 மில்லியன் டாலருக்கும் மேலாக முதலீடு செய்துள்ளார். இது அவரின் கடைசி முதலீடுகளில் ஒன்று, இது கடைசி முதலீடு மட்டும் அல்ல, அவரின் இதயத்திற்கு நெருக்கமான முதலீடுகளில் ஒன்று. இந்த விமானத்தில் முதன் முதலாக பயணித்த பயணிகள், ஜுன் ஜுன்வாலாவுடனான உரையாடல்கள் மற்றும் செல்ஃபிகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

தொடர்ந்து இயங்கும்
ஜுன்ஜுன்வாலாவின் நிதி கவரும் திறன், அவரின் அறிவுரை, கவர்ச்சியான பேச்சுகள் என எதுவும் இல்லாதபோதும் கூட, நிறுவனம் தொடர்ந்து இயங்குவதை அவர் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து ஹெச் டி எஃப் சி செக்யூரிட்டீஸின் சில்லறை ஆராய்ச்சி தலைவர் தீபக் ஜசானி, இந்த முயற்சியானது இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, பெருகி வரும் நடுத்தர வர்த்தகத்தினரின் வளர்ச்சி, தொழிற்துறை வளர்ச்சி, எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் நம்பிக்கையையும் குறிக்கிறது.

அழுத்தம் இருக்கலாம்
எனினும் ஜுன்ஜுன்வாலாவின் மறைவு தற்காலிகமாக ஆகாசா ஏர்லைன்ஸில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது சற்று இடை நிறுத்தத்தினை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளார். ஏனெனில் ஆகாசாவுக்கு நிதி வழங்குவதில் முக்கியமானவர் ஜுன்ஜுன்வாலா. ஆக நிறுவனம் நிதி வழங்குவதில் வேறொரு முதலீட்டாளரை தேடலாம். எனினும் இதுவரையில் லாபம் இல்லாத ஒரு ஆரம்பகால நிறுவனத்தில் முதலீடு செய்ய யார் தயாராக இருக்கிறார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எப்படி இருப்பினும் குறுகிய காலத்தில் நிறுவனம் சற்று அழுத்தத்தினை எதிர்கொள்ளலாம் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
யார் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!
What does the future hold for Akasa Airlines?
What does the future hold for Akasa Airlines?/ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு.. ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எதிர்காலம் இனி எப்படியிருக்கும்?