சென்னை அரும்பாக்கத்தில் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நகைகள் மீட்கப்பட்டால் வழக்கு முடிந்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு அது திரும்ப கொடுக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. நகைகள் கிடைக்காத பட்சத்தில் இன்சூரன்ஸ் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.நகை கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் அச்சப்பட தேவையில்லை என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
