
விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு!
கொம்பன் படத்தை அடுத்து முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள படம் விருமன். அவருடன் அதிதி ஷங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த இப்படம், குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
விருமன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. இப்படம் திரைக்கு வந்த முதல் நாளில் 7 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் படம் திரைக்கு வந்து இரண்டாவது நாளில் விருமன் படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டி கொண்டாடி இருக்கிறார்கள். கார்த்தி, முத்தையா ஆகியோருக்கு மாலை அணிவித்து கேக் ஊட்டி விடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.