பெங்களூரு : சுதந்திர தினத்தையொட்டி, கைத்தறி மற்றும் கதர் உற்பத்தி பொருட்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், மெட்ரோ ரயில் நிலையங்களில் கதர் உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு வாய்ப்பளிக்க, பி.எம்.ஆர்.சி.எல்., முடிவு செய்துள்ளது.இது குறித்து, பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நேற்று வெளியிட்ட அறிக்கை:சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, கைத்தறி மற்றும் கதர் உற்பத்தி பொருட்களை ஊக்கப்படுத்த, பி.எம்.ஆர்.சி.எல்., முடிவு செய்துள்ளது.சுவாமி விவேகானந்தர் மெட்ரோ ரயில் நிலையத்தின், பெங்களூரு சந்தை இடத்தில், தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய, கைத்தறி நெசவாளர்கள், கைவினை தயாரிப்பாளர்களுக்கு, இலவசமாக வாய்ப்பளிக்கப்படும்.
வரும் 15 முதல் 21 வரை, நெசவாளர்கள் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கும். ஏற்கனவே கர்நாடகாவின், பல இடங்களில் இருந்தும், நெசவாளர்கள், கைவினை உற்பத்தி தயாரிப்பாளர்களுக்கு, கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் வரை, அந்த இடத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்து கொள்ள அனுமதியளிக்கப்படும்.கதர் உடைகள், கை வினைப் பொருட்கள், ஆடைகள், வீட்டு அலங்கார கைவினைப் பொருட்கள், சம்பிரதாய உடைகள், சேலைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் உட்பட, தின் பண்டங்களையும் கூட, விற்பனை செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement