பெட்ரோ- டீசல் விலை
பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63-க்கும் டீசல் ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பாஜகவிலிருந்து விலகிய மதுரை மாவட்ட தலைவர்
பாஜகவில் இருந்து விலகுகிறார் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன். மதுரையில் நடந்த சம்பவத்திற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கோரினார்.பாஜகவின் மதவெறுப்பு அரசியல் பிடிக்காததால் அங்கு தொடர விரும்பவில்லை எனவும் அறிவிப்பு. “ நடந்த சம்பவத்தை நினைத்து தூக்கம் வரவில்லை; உடனடியாக அமைச்சர் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்டேன்; இதுவும் எனக்கு ஒரு தாய் வீடுதான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
தமிழக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு. திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன 3 உலோக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை கண்டுபிடித்தது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
சென்னை அரும்பக்கம் ஃபெடரல் வங்கிக் கொள்ளை வழக்கில் 6 பேர் ஈடுபட்டுள்ளனர். பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில் 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆவின் நிறுவனம் சார்பாக மூவர்ண குல்ஃபி நாளை முதல் அறிமுகம் செய்யப்படுகிறுது என்று அறிவித்துள்ளது.
சென்னை, அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்கம் மீட்பு என தகவல் வெளியாகி உள்ளது. நேற்று 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் 15 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல். இந்த கொள்ளை சம்பவத்தில் பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், சக்திவேல் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் நாளை (ஆக.15) கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றியுள்ளார்.
அந்த உரையில், ‘நாட்டின் விடுதலைப் போரில் பழங்குடியினரின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். மேலும், நவம்பர் 15ஆம் தேதி பழங்குடியினர் தினமாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது” என்றார்.
தொடர்ந்து, “இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்” எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஷாருக்கான் தனது வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார்.
அதேபோல் நகைக்சுவை நடிகர் சூரியும் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றினார்.
கௌதம் வாசுதேவ் மேனன் டைரக்ஷனில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாது சிங்கிள் டிராக் மறக்குமா நெஞ்சம் வெளியானது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்தி மொழி இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தமிழ், ஆங்கிலத்தில் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி மாநிலத்தின் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகரப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் .இயற்கை பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு நிதி மற்றும் உள்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
‘ஆர்எஸ்எஸ்காரர்கள் நாட்டின் விடுதலைக்காக போராடவில்லை. அவர்கள் ஆங்கிலேயரை விமர்சிக்கவில்லை. ஆனால் காந்தியை விமர்சித்தனர்’ என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு தொடர்ந்து டீசல் விலையை ஏற்றினாலும் பேருந்து கட்டண உயர்வு என்ற பேச்சுக்கு இடமில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்காக ரூ.25 லட்சத்திற்கான காசோலையை விருமன் படக்குழு நாசரிடம் வழங்கினர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர் காவலர் (ஆயுதப் படை மற்றும் சிறப்பு காவல் படை) பணிக்கு விண்ணப்பிக்க நாளை (ஆகஸ்ட் 15) கடைசி நாளாகும்.
‘பாரதிய ஜனதாவின் அரசியல் விளையாட்டு இங்கு எடுபடாது. இது தமிழ்நாடு’ என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மேலும் அவர், “தேசப் பக்தி என்ற லேபிளை ஒட்டிக் கொண்டு தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் அரசியல்தனத்தை சட்டப்படி அடங்குவோம்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். தனது காரில் வீசப்பட்ட ஒற்றை செருப்பை அதற்குரிய சிண்ட்ரெல்லா வாங்கிச் செல்லலாம் என தனக்கு எதிராக செயல்பட்டவர்களின் தராதரத்தை வெளிப்படுத்தியுள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.” எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
சென்னை திருவொற்றியூரில் இந்தக் கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாயமான நால்வரை மீட்புக் குழுவினர் தேடிவருகின்றனர்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் விழா தொடங்கியது. இதில் வெளிநாட்டில் இருந்து 4 குழுக்கள் மற்றும் இந்தியாவில் இருந்து 6 குழுக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
திமுகவில் இணைவதில் என்ன தவறு; திமுக என் தாய் கட்சி. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது பாஜகவினரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. தலைமையின் வழிகாட்டுதல் படியே அமைச்சருக்கு எதிராக பேசினேன். பின்னர் மன அழுத்தம் காரணமாக அமைச்சரை சந்தித்தேன் என பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சரவணன் தெரிவித்துள்ளார்
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, அரும்பாக்கம் தனியார் வங்கியில் நேற்று பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ள நிலையில், தற்போது அது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது
பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, வாகா எல்லையில் இந்தியா – பாகிஸ்தான் பாதுகாப்புப்படை வீரர்கள் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்!
திருப்பூர்: பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி அவமதித்த விவகாரம் – பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் ரகுபதி மீது வழக்குப்பதிவு
கரும்பு நிலுவைத் தொகை ரூ.252 கோடி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
திருப்பூரில் பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி அவமதித்த விவகாரத்தில், பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் ரகுபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை அடுத்து சென்னை, நாகை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
டெல்லியில் வரும் 17ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்.
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்.
இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட புகாரில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைது
ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக ஏற்கனவே இருவர் கைதான நிலையில் பாஸ்கரையும் கைது செய்து போலீசார் நடவடிக்கை
அரும்பாக்கம் வங்கி கொள்ளை பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம்
கொள்ளையர்களை பிடிக்கும் காவலர்களுக்கும் ரூ.1 லட்சம் சன்மானம் – டிஜிபி சைலேந்திர பாபு அறிவிப்பு
மதுரை நகர் மாவட்ட தலைவர் டாக்டர் P.சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை
https://twitter.com/BJP4TamilNadu/status/1558663189348634624?t=NHFPvx2q-62rPk0-BQ_pCw&s=15
நிதியமைச்சரின் வாகனம் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் விரும்பதகாத நிகழ்வு – மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி.
”நேற்றைய சம்பவம் தொடர்பாக நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டும். அதை பின்பு சொல்கிறேன். விமான நிலையத்தில் 100 மீட்டர் வரை அனுமதிக்கப்பட்ட சிண்ட்ரெல்லாவும் அவரது 10 நிர்வாகிகளுக்கும், உங்களது காலணி வேண்டும் என்றால் பெற்றுக்கொள்ளலாம். எனது ஊழியர் அதை பத்திரமாக வைத்துள்ளார்” – பழனிவேல் தியாகராஜன்
அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை வங்கி ஊழியரே நண்பர்களுடன் இணைந்து கொள்ளையடித்தது அம்பலம் ஆறு தனிப்படைகள் அமைத்து, கொள்ளையனை பிடிக்கும் பணி தீவிரம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 21ஆம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து.