இதுதான் எங்க வீடு.. பாரதி கண்ணம்மா லட்சுமி ஹோம் டூர் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இல்லத்தரசிகள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரின் விருப்பமான தொடராக உள்ளது. இது ‘கிருஷ்ணகோலி’ என்ற பெங்காலி சீரியலின் தழுவலாகும்.

பாரதி கண்ணம்மா சீரியலில், அருண் பிரசாத், ஃபரினா ஆசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த சீரியலுக்கு பிறகு கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் வரத் தொடங்கினர். அதனாலேயே பாரதி கண்ணம்மா சீரியல், எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருந்தது.

அதில் கண்ணம்மாவாக நடித்து அனைவரின் இதயங்களையும் கட்டிப்போட்ட ரோஷினி ஹரிப்பிரியன் திடீரென சீரியலில் இருந்து விலகினார். தற்போது, அவருக்கு பதிலாக கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.

இதில் கண்ணம்மாவுக்கு ஹேமா, லட்சுமி என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். லட்சுமிக்கு பாரதி தான் தன் அப்பா என்கிற உண்மை ஏற்கெனவே தெரிந்துவிட்டது. ஆனால் ஹேமாவுக்கு தன் அம்மா யார் என இன்னும் தெரியாமல் இருக்க, லட்சுமி உனக்கும் எனக்கும் ஒரே அப்பாதான் என்று ஹேமாவிடம் சொல்கிறாள்.

லட்சுமி சொன்னது குறித்து ஹேமா, தன் பாட்டி செளந்தர்யாவிடம் கேட்க, அவரும், கண்ணம்மாதான் உனக்கு அம்மா என்று உண்மையை சொல்லிவிட்டார்.

லட்சுமிக்கும், ஹேமாவுக்கும் இப்போது உண்மை தெரிந்து விட்டதால் இனி அடுத்து சீரியலில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

இதில் ஹேமாவாக லிஷாவும், லட்சுமியாக ரக்ஷாவும் நடிக்கின்றனர். ரக்ஷா, பிரபல சீரியல் நடிகர் ஷியாமின் மகள். சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

அப்பாவுடன் ரக்ஷா

ரக்ஷாவின் அக்கா நிவாஷினி. கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பிறகு, விஜய் டிவியின் செந்தூரப் பூவே சீரியலில், கனிமொழி துரைசிங்கம் என்ற கேரக்டரில் நடித்தார்.

ரக்ஷா, அவளது அக்காவுடன் சேர்ந்து Raksha vibes எனும் பெயரில் யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் இருவரும் அடிக்கடி வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். அப்படி ஒருமுறை அவர்கள் தங்கள் ஹோம் டூர் வீடியோவையும் யூடியூபில் பகிர்ந்திருந்தனர். வீடியோவில் லிவிங் ரூம், டைனிங், பூஜை அறை, பெட்ரூம் கிச்சன் என ஒரு இடம் விடாமல் ஒவ்வொரு அறையாக சுற்றிக் காட்டுகின்றனர். இதுவரை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

இதைப் பார்த்த பலரும் அழகான குடும்பம், அழகான வீடு. இரண்டு அழகு தேவதைக்கும்  வாழ்த்துகள் என பாராட்டி உள்ளனர்.

இதோ அந்த வீடியோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.