
இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வந்த படம் இந்தியன் 2. படப்பிடிப்புக்கு ஏற்பட்ட சில இடையூறுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக 40 சதவீதம் படமாக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளாக அப்படம் கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கப்போவதாகவும், தானும் இந்தியன் -2 படத்தில் நடிக்கப் போவதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார் காஜல் அகர்வால்.
இப்படியான நிலையில், தற்போது மும்பை விமான நிலையத்தில் மீடியாக்களை சந்தித்த அவர், இந்தியன்- 2 படப்பிடிப்புக்காக தான் சென்னைக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். அதனால் இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்க இருக்கும் தகவல் உறுதியாக இருக்கிறது. அப்படி மும்பை விமான நிலையத்தில் மீடியாக்களிடம் காஜல் அகர்வால் பேசிய வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் முன்பு போலவே ஸ்லிம்மாக காணப்படுகிறார் காஜல்.