இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள நிறுவனங்கள், இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக உள்ளன.
ஏற்றத் தாழ்வுகள் இருந்த போதிலும் அதனையும் சமாளித்து, இன்று வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் நிறுவனங்கள் பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிக் கொண்டுள்ளன.
இப்படிபட்ட நிறுவனங்களில் சந்தை மதிப்பின் அடிப்படையில் இந்தியாவின் டாப் 10 நிறுவனங்கள் எவை? எந்த நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
7000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 2 லட்ச ரூபாயை இழந்த 62 வயதான நீலம் சிங்..!
பிஎஸ்இ
பிரிட்டீஸ் ஆட்சிகாலத்தில் இருந்தும், சுதந்திரம் பெற்றதில் இருந்து அதன் பங்கு சந்தை எக்ஸ்சேஞ்ச்-களும் நீண்டகால வளர்ச்சி கண்டு வருகின்றன. இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் 1855ல் தொடங்கியது. 1875ல் மும்பை பங்கு சந்தை, தற்போது பிஎஸ்இ என்று அழைக்கப்படும் எக்ஸ்சேஞ்ச், ஆசியாவின் முன்னணி பங்கு சந்தைகளில் ஒன்றாக மாறியது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்திய பங்கு சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு முக்கியமானது எனலாம். இதன் சந்தை மதிப்பு 1,781,192.94 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது ஆசியாவில் முதல் பில்லியனர் ஆன முகேஷ் அம்பானி தலைவராக உள்ள நிறுவனமாகும். இது எண்ணெய் முதல் டிஜிட்டல் வணிகம் வரையில் வெற்றிகரமாக கோலேச்சி வரும் நிறுவனமாகும். தற்போது புதிய புதிய வணிகங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றது. தொடர்ந்து முதலீடுகளையும் பல்வேறு துறைகளில் விரிவுபடுத்தி வருகின்றது.
டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்
நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவன டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், நாட்டில் அதிகளவில் வேலை வாய்ப்பினை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இதன் சந்தை மதிப்பு 1,244,004.29 கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவின் முன்னணி ஐடி ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி ,வங்கி சேவை உள்பட, பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வருகின்றது. இதன் சந்தை மதிப்பு 825,207.35 கோடி ரூபாயாக உள்ளது.
இந்த வங்கியின் துணை நிறுவனமான ஹெச் டி எஃப் சியினை இணைக்க திட்டமிட்டுள்ளது. இதனை இணைக்கும்பட்சத்தில் இன்னும் இதன் சந்தை மதிப்பு அதிகரிக்கலாம்.
இன்ஃபோசிஸ்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், 670,920.64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. டெக்னாலஜி ஜாம்பவான் ஆன இன்ஃபோசிஸ் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வரும் இந்த நிறுவனம், சர்வதேச அளவில் தனது சேவையினை வழங்கி வரும் ஒரு நிறுவனமாகும்.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
இந்தியாவின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், நிறுவனத்தின் சந்தை மதிப்பு 609,765.92 கோடி ரூபாயாக உள்ளது. இது இந்திய சந்தையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ஐசிஐசிஐ வங்கி
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியானது, சிறந்த வணிக வங்கியாகவும் உள்ளது. இது இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இதன் சந்தை மதிப்பு 608,729.12 கோடி ரூபாயாக உள்ளது.
எஸ்பிஐ
இந்தியாவின் முன்னணி கடன் வழங்குனரும், பொதுத்துறையை சேர்ந்த வங்கியுமான எஸ்பிஐ-யின் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக உள்ளது. இதன் சந்தை மதிப்பு 473.584.52 கோடி ரூபாயாகும். இன்றும் தனியார் வங்கிகள் கூட போட்டி போட முடியாத அளவுக்கு பல்வேறு சேவைகளை வங்கி துறையில் வழங்கி வருகின்றது.
ஹெச் டி எஃப் சி
தனியார் துறையை சேர்ந்த முன்னணி நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி, நாட்டின் மிகப்பெரிய வீட்டுக் கடன் சேவை வழங்கும் நிறுவனமாகும். இதன் சந்தை மதிப்பு 445,397.89 கோடி ரூபாயாகும்.
பஜாஜ் பின்செர்வ்
நாட்டின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் பின்செர்வ், சந்தை மதிப்பின் அடிப்படையில் எட்டாவது இடத்தில் உள்ளது. இதன் சந்தை மதிப்பு 442,496.12 கோடி ரூபாயாகும்.
எல்ஐசி
இந்தியாவின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமும், பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் சந்தை மதிப்பு, 431,459.72 கோடி ரூபயாகும். இது டாப் 10 நிறுவனங்களில் 10 வது இடத்தில் உள்ளது. இது சமீபத்தில் தான் இந்திய பங்கு சந்தையில் தனது பங்கு வெளியீட்டினை செய்தது.
india’s top 10 stocks by market capitalization: Which company first
india’s top 10 stocks by market capitalization: Which company first/இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களின் பட்டியல்.. எந்த நிறுவனம் பர்ஸ்ட்!