இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சியின்போதுதான் தொலைத் தொடர்பு துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தது. அஞ்சல், டெலிகிராப் என தகவல் பரிமாற்றத்திற்குத் தேவையான துறைகளில் ஆங்கிலேயர்கள் கவனம் செலுத்தினர்.
அதில் பல்வேறு மாற்றங்களையும் அவர்கள் கொண்டு வந்தனர். அப்படி வளர்ந்த இந்திய தொலைத் தொடர்புத் துறை கடந்த 75 ஆண்டுகளில் சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு துறையாக மாறியிருக்கிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய தொலைத் தகவல் தொடர்புத் துறை ஆக்கபூர்வமான மற்றும் முன்னோக்கிய பார்வை கொண்டதாகவே இருந்து வந்துள்ளது. அதன் பொருட்டே இந்திய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பல பிரிவுகளாக பரிணாமமடைந்து . இன்றைய காலக்கட்டத்தில், தகவல் தொழில்நுட்ப துறை சேவைத் துறையாக பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அடித்தட்டு மக்களையும் தகவல் தொலை தொடர்புகள் சேர வேண்டும் என்ற எண்ணம் கொண்டு உலக அரங்கில் இந்தியா செயல்படுகிறது. அதன் விளைவாய் நம் நாட்டில் சிறு கிராமங்களுக்கு கூட இன்று இணையதள வசதியும் மொபைல்போன் வசதியும் சென்றடைந்திருக்கிறது என்பதை கண்முன் பார்த்து வருகிறோம்.
இந்தியாவில் 1851-ஆம் ஆண்டு கொல்கத்தாவுக்கும் டைமண்ட் துறைமுகத்துக்கும் இடையே முதன்முதலில் மின்னணு டெலிகிராப் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1853-ஆம் ஆண்டு சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் டெலிபோன் எக்சேஞ்ச் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பல தகவல் தொலைத் தொடர்பு துறை மாற்றங்கள் நடந்தன. அதில் குறிப்பிட்டு சொல்லும்படி சுதந்திர இந்தியாவில் முதல் மொபைல் டெலிபோன் சேவை 1995-ம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் டெலிபோன் சேவை என்பது ராட்சத வளர்ச்சி அடைந்தது என்றே கூறலாம்.
இந்திய தொலைத் தொடர்பு துறை லட்சக்கணக்கான கிராமங்களை சென்றடைந்திருக்கிறது. 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கின்படி இந்தியாவில் 5 லட்சத்துக்கு அதிகமான கிராமங்களில் தொலைத் தொடர்பு வசதி சென்றடைந்ததாக கூறப்பட்டது. அவ்வாறு இருப்பின் தற்போது இந்த எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்திருக்கும்.
சர்வதேச அளவில் இன்டர்நெட் வசதியை பயன்படுத்துவதில் இந்தியாவின் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 15 வருடங்களாக மிக அதிகமாக அந்நிய நேரடி முதலீடு வரும் துறையாக இந்திய தொலைத் தொடர்பு துறை உள்ளது.
இந்தியாவில் வளர்ச்சி அடைந்த துறையாக உள்ள இந்த தகவல் தொழில் நுட்ப துறையின் மூல லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. உலகிலேயே தொலைபேசி கட்டணம் இந்தியாவில்தான் குறைவானது.
இந்தியாவில் கிட்டதட்ட 70 கோடிக்கும் அதிகமான தற்போது ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். உலக அளவில் அதிகாமானோர் கைபேசிகள் பயன்படுத்து நாடுகளின் பட்டியல் இந்தியா இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. முதல் இடத்தில் நமது அண்டை நாடான சீனா உள்ளது.
உலகளவில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியை இந்தியா சரியாக புரிந்து கொண்டது. அதன் விளைவாய் நாம் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என்று அடுத்தடுத்த தொழில்நுட்பத்தை சென்றடைந்திருக்கிறோம்.
இந்திய தொழில் நுட்ப துறையின் பெரும் வெற்றியாக டிஜிட்டல் இந்தியாவை கூறலாம். டிஜிட்டல் மூலம் பணம் செலுத்தும் முறையில் உலகளவில் தயக்கங்கள் இருந்த நிலையில், இந்தியா அதனை உடைத்து வெற்றியடைத்திருக்கிறது.
இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப துறையின் வரலாறு காணாத வளர்ச்சி, கடந்த காலங்களில் அதன் மூலம் கிடைத்த பயன்களையும், வருங்காலத்தில் கிடைக்கவுள்ள எல்லையில்லா வாய்ப்புகளையும் நமக்குத் தெரிய வைத்திருக்கிறது. அதே நேரத்தில், இப்பாதையில் பயணிக்கும் போது நாம் எதிர்கொண்டு வெல்லவேண்டிய சவால்கள் சாதாரணமானவை அல்ல என்பதை உணர்ந்து வெற்றிப் பாதையில் நடை போடுவோம்.
வீடியோவை இங்கு காணலாம்: