ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தைக் கலக்கிவரும் மிகவும் சுவாரஸ்யமான ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு. பல சமூக ஊடகப் பயனர்கள், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களின் சுவாரஸ்த்தில்மயங்கிப்போய் வெறித்தனமாக விடை தேடி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல், சமூக ஊடக பயனர்கள், சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் படங்களை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு அவர்களிடம் விடை கேட்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் மிகவும் சுவாரசியமாக இருப்பதற்கு காரணம், குறைந்த நேரத்தில் பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். சற்று நேரத்தில் உங்கள் மூளையைக் குழப்பும், விடையை மறைத்து உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சவாலானது. இந்த படம் ஒரு காட்டுப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல விலங்குகள் காட்டில் புல்வெளியில் விலங்குகள் மேய்ந்துகொண்டிருக்கிறது. அங்கே ஒரு நீர் நிலையும் இருக்கிறது. இங்கே ஒரு முதலை மறைந்திருக்கிறது . அதை 13 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். இந்த படத்தில் மறைந்திருக்கும் முதலையை 13 நொடிகளில் கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையைக் கண்டுபிடிப்பதில் ஷார்ப்தான் பாஸ் ஏனென்றால், இது அந்த அளவுக்கு சவாலானது. பலரும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த படத்தில் உள்ள காட்டில் ஒரு குளம் இருக்கிறது. குளத்தைச் சுற்றி பல வரிக்குதிரைகள் இருக்கிறது. அந்த வரிகுதிரைகளைச் சுற்றிசுற்றி முதலைகள் மறைந்திருக்கிறது. மிகவும் கவனமாகப் பார்த்து முதலையைக் கண்டுபிடியுங்கள்.
நீங்கள் முதலையைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து மிகவும் நெருக்கமாகப் பாருங்கள். முதலையைக் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போதும் உங்களால், முதலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்காக முதலை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளியுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”