நெல்லை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து ஆத்திரம் அடைந்த மக்கள் பேருந்து ஓட்டுனருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து சேரன்மகாதேவி வழியாக திருநெல்வேலிக்கு நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. தருவை அருகே சென்ற போது நாகர்கோவிலைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி குமார் என்பவரின் இரு சக்கர வாகனத்தில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தனியார் பேருந்து ஓட்டுனர் சக்திவேலை தர்ம அடி கொடுத்தனர். மேலும் அந்த பேருந்தின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். இந்த விபத்து குறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.