இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை குறைந்தது


இறக்குமதி செய்யப்படும்  அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் மொத்த விலை  குறைந்துள்ளது.

புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.  

ஆனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, செத்தல் மிளகாய், வெங்காயம் போன்ற இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை இன்றும்  குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய விலைப் பட்டியல்..

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப்  பொருட்கள் பலவற்றின் விலை குறைந்தது | Reduction In Prices Of Many Essential Items

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பருப்பின் மொத்த விலை 430 முதல் 450 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்படும் அரிசிகளான பொன்னி சம்பா, வெள்ளை பச்சை, சிவப்பு பச்சை போன்றவற்றின் மொத்த விலை 170 முதல் 190 ரூபா வரை உள்ளது.

புறக்கோட்டை மொத்த விற்பனை கடைகளில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 160 ரூபா மற்றும் 165 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 140 முதல் 150 ரூபா வரையிலும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் மொத்த விலை 1350 முதல் 1500 ரூபா வரையிலும் உள்ளது.

இருப்பினும், புறக்கோட்டையில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் சில்லறை விலை அதிகமாக உள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களினால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.