இந்தியாவுடனான ஒத்துழைப்பினால் ஏனைய துறைகளில் கிடைக்கப்பெற்ற பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோனியர் பரிசளிக்கப்பட்டமையும் முக்கியமானதாக காணப்படுகின்றது என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
கடல் பாதுகாப்பு குறித்த தேவைகளை இலங்கை நிவர்த்தி செய்வதற்கான ஒரு படியாகவும் இது கருதப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.
கையளிக்கப்பட்ட டோனியர் விமானம்
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட Dornier 228 விமானம் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் கட்டுநாயக்கவில் விமானம் கையளிக்கும் நிகழ்வில் இணைந்துகொண்டார்.
இதன்போதே இந்திய உயர்ஸ்தானிகர் இதனை குறிப்பிட்டார்.
வங்காள விரிகுடா மற்றும் இந்து சமுத்திர பிராந்தியங்களிலுள்ள, இலங்கை போன்ற அயல் மற்றும் நட்பு நாடுகளின் பலத்தினை வலுவாக்குவதிலும் இந்தியாவின் வல்லமை உறுதுணையாக நிற்கின்றமைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.