இந்தியாவில் 75-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், தனது கட்சி தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்ற வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி தொண்டர்களை கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ளார்.
இந்தியாவ சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து இந்த நாள் தற்போது உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் இந்த நந்நாளை அமுத பெருவிழாவாக கொண்டாட திட்டமிட்ட மத்திய பாஜக அரசு ஆகஸ்ட் 13-ந் தேதி முதல் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை 3 நாட்கள் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடு மற்றும் அலுவலங்களில் தேசியகொடி ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சுதந்திர தினமான இன்று, நாடு முழுவதும் அந்ததந்த மாநிலங்களில் முதல்வர்கள் கொடி ஏற்றிய நிலையில், அரசியல் கட்சியின் தலைவர்கள் தங்களது தலைமை அலுவலங்களில் கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திர தின விழாவை சிறப்பித்தனர்.
அந்த வகையில், தனது கட்சியின் அலுவலகத்திற்கு கொடி ஏற்ற வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொடி ஏற்றி வைக்க வந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலகியுள்ள விஜயகாந்த், எந்த விழாவிலும் பங்கேற்றாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். மேலும் தொண்டர்கள் மட்டுமல்லாது திரைத்துறையில் அவரின் நெருங்கிய நண்பர்களை கூட சந்திப்பதில்லை என்று தகவல் வெளியானது.
இதனிடையே இன்று விஜயகாந்த் கட்சி அலுவலகம் வருகிறார் என்ற செய்தி அறிந்து ஏராளமான தொண்டர்கள அங்கு குவிந்தனர். அப்போது பிரச்சார வேனில் தனது மனைவி பிரேமலதாவுடன் மாஸ்க் அணிந்தபடி வந்த விஜயகாந்த், தொண்டர்களை காட்டி கையசைத்துவிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவரது கை மட்டுமே கொடியின் கயிற்றை பிடித்திருந்த நிலையில், அவரது மனைவி பிரேமலதாவே கயிற்றை இத்து கொடி ஏற்றினார்.
பின்னர் தொண்டர்கள் இனிப்பு கொடுத்த போதும், அதை வாங்கிய பிரேமலதா விஜயகாந்துக்கு ஊட்டுவதற்காக மாஸ்கை கழற்றினார். அப்போது அவரது முகம் தெரிந்தபோது தொண்டர்கள் ஆராவாரத்துடன் கோஷங்கள் எழுப்பினர். ஆனால் விஜயகாந்த கொடி ஏற்றிவிட்டு சென்றதும் தொண்டர்கள் உங்களுக்கா இந்த நிலைமை என்று சொல்லி கண்ணீர்விட்டு அழுதனர்.
திரைத்துரையிலும், அரசியலிலும் கேப்டன் என்ற மகுடத்துடன் வலம் வந்த விஜயகாந்த் தற்போது வீட்டிற்குள் முடங்கியிருப்பது அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களையும் திரைத்துரையில் அவரது சக நண்பர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”