புதுடில்லி: நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்று ,இதனை ஒழிக்க மக்கள் அனைவரும் எனக்கு துணையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரை யில் ;
மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா முக்கிய இடம் பிடித்துள்ளது. தரமான பொருட்களை நாம் உற்பத்தி செய்து வருகிறோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பெருமையை தேடி தந்துள்ளது. வெளி நாட்டு பொருட்கள் ,பொம்மைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பிறரை சார்ந்திருக்காமல் வாழ வேண்டும்.
தளவாடங்கள் உற்பத்தி
பாதுகாப்பு துறையில் நாம் 300 தளவாடங்களை உள்நாட்டில் தயாரித்து வருகிறோம். தற்சார்பு கொள்கை அரசின் கொள்கை அல்ல. இது மக்கள் இயக்கம். தற்சார்பை நாம் முன்னெடுத்து செல்வோம்.
பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிகோலும். டிஜிட்டல் இந்தியா ,ஸ்டார்ட் அப் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறது.
ஊழலுக்கு எதிரான எண்ணம் வர வேண்டும். நாட்டை கொள்ள அடித்தவர்கள் தக்க தண்டனை பெற்றே தீர வேண்டும் . அதில் எந்தவொரு பெரிய நபரும் தப்பிக்க முடியாது. ஊழலுக்கு எதிரான போரில் மக்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். குடும்ப அரசியல் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும். இது தான் ஊழலுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement