ஐதராபாத்: ‘ஒன்றிய பாஜ அரசானது, மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனப்படுத்துகின்றது’ என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், ‘‘ஒன்றிய அரசு, மாநில அரசுகள் ஒன்றிணைந்து முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கூட்டாட்சி அமைப்பை உருவாக்கினார்கள். ஆனால் ஒன்றிய அரசானது கூட்டாட்சியின் மதிப்பிற்கு தீங்கிழைக்கின்றது. உட்கார்ந்திருக்கும் மரக்கிளையையே வெட்டுவது போன்று, மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும் சதிகளில் ஒன்றிய அரசு ஈடுபடுகின்றது. ஒன்றிய அரசு வசூலிக்கும் வரிமூலமான வருவாயில் 41சதவீதத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் மாநிலஙக்ளின் வருமான பங்கானது 11.4சதவீதம் குறைகின்றது. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பொருளாதாரத்தில் மாநில அரசுகளின் சுதந்திரத்தை பறிக்கின்றது’’ என்றார்.