திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க, நேற்று முன்தினம் 15 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க, கோடை விடுமுறை முடிவு பெற்ற பின்னும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும், இந்த வாரம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி, பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டோர் தங்கள் திருமலை பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்றும், தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏழுமலையான் தரிசனத்திற்கு வர வேண்டும் என்றும் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருமலைக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு, பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.நேற்று முன்தினம் தரிசனத்திற்காக பக்தர்கள் 15 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 3 – 4 மணி நேரம் தேவைப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement