புதுடில்லி : “நம்நாட்டில் விரைவில் ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்; இதற்காக நோவவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் தீவிரமாக ஆய்வில் ஈடுபட்டுள்ளது,” என, சீரம் நிறுவன தலைவர் அடர் பூனவாலா கூறினார்.
கடந்த 2020ல் பரவிய கொரோனா தொற்று உலகையே முடக்கியது. பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்த பின் தொற்று பரவல் கட்டுக்குள் வந்து, உலக நாடுகளில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால், கொரோனாவின் உருமாறிய பல வைரஸ்கள் இந்தியா உட்பட பல நாடுகளில் இன்றும் பரவி வருகின்றன. கொரோன வைரஸ் முதலில் பரவியதாக கூறப்படும் நம் அண்டை நாடான சீனாவில் தற்போதும் சில இடங்களில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. நம்நாட்டிலும் சமீப நாட்களாக தலைநகர் புதுடில்லி உட்பட பல்வேறு நகரங்களில் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ”கொரொனாவின் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரசுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் அமெரிக்காவின் நோவவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். இது, இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்,” என சீரம் நிறுவன தலைவர் அடர் பூனவாலா கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement