ஓபன் ஆசியா ஆணழகன் போட்டி: முதல் மூன்று இடங்களை பிடித்த இந்திய வீரர்கள்

பல்வேறு நாடுகளில் இருந்து 140 பேர் பங்கேற்ற ஓபன் ஆசியா 2022 ஆணழகன் போட்டி ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் இந்தியன் ஃபிட்னஸ், ஃபிட்னஸ் ஃபெடரேஷன் செயலாளர் ஜெகநாதன் தலைமையில் ஓபன் ஆசியா 2022 ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் சவுதி அரேபியா, துபாய், இலங்கை, அந்தமான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 140 பேர் கலந்து கொண்டனர்.
image
வேர்ல்ட் பாடி பில்டிங் பெடரேஷன், இந்தியன் பிட்னஸ் ஃபெடரேஷன் ராம்நாடு ஆகியோர் இணைந்து நடத்திய இந்தப் போட்டியை தனசேகரன் தலைமையில் 5 நீதிபதிகள் ஆணழகனை தேர்வு செய்தனர். இறுதிப் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த இந்திய வீரர்களுக்கு ரொக்கப்பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தபடி இருந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.