காட்டு யானைகளினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பான சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
இவற்றைத் தடுப்பதற்கு மின்வேலிகளை அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பதற்கு அடுத்த வருடம் நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த பாதிப்புக்களை அடுத்தாண்டு முடிவதற்குள் முடிப்பதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு விவசாய சங்கங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடி உடன்பாட்டை எட்டுவதற்கான திட்டத்தை மேற்கொள்ள அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பாதிப்புக்கள் அதிகரித்துள்ளது.. 2019 ஆம் ஆண்டில் 407 யானைகள் இறந்துள்ளன.
122 பேர் உயிரிழந்துள்ளனர். 2020 ல் 328 யானைகள் மற்றும் 112 மனித இறப்புக்களும் 2022 இல் 375 யானைகள் மற்றும் 142 மனித இறப்புக்களும் பதிவாகியுள்ளன.
2022 இன் முதல் நான்கு மாதங்களில் 47 யானைகள் இறந்துள்ளதுடன் 34 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 13 காட்டு யானைகள் துப்பாக்கி சூடு காரணமாக உயிரிழந்துள்ளன. மின்சாரம் தாக்கி 17 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. வெடி (ஹக்க பட்டஸ்) காரணமாக 19 இறப்பு மற்றும் காயத்திற்கு உள்ளாகி 08 யானைகளும் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.