கிரெடிட் ஸ்கோர் தவறா இருக்கா.. என்ன செய்ய வேண்டும்?

கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் பல நிதி நிறுவனங்கள் கடன் வழங்காமல் தவிர்த்திருக்கலாம். அப்படியே கடன் வழங்கினாலும், வட்டி விகிதம் அதிகமாக இருக்கலாம்.

கடன் தகவல் நிறுவனங்களால் (CISs ) சிபில் ஸ்கோர் அறிக்கையானது வழங்கப்படுகின்றது. இந்த தகவல்கள் பொதுவாக உங்களது கடன் பரிவர்த்தனையை பொறுத்து இருக்கும்.

சில நேரங்களில் இந்த தகவல்களில் பிரச்சனைகள் இருக்கலாம். இதனை எப்படி சரி செய்வது? இதனால் எளிதில் கடனும் கிடைப்பது இல்லை. அப்படியே கிடைத்தாலும் வட்டி விகிதமானது அதிகமாக இருக்கும்.

ஒரு போதும் இந்த 4 தவறுகளை செய்யாதீர்கள்.. கிரெடிட் ஸ்கோர் குறையாமல் இருக்க என்ன வழி?

கடன் அறிக்கையில் பிரச்சனை

கடன் அறிக்கையில் பிரச்சனை

சில நேரங்களில் நீங்கள் கடனை சரியாக செலுத்தி இருந்தாலும் கூட, உங்களது கடன் அறிக்கையில் பிரச்சனை இருக்கலாம். இதனால் பரிவர்த்தனையில் பிரச்சனை ஏற்படலாம். இந்த மாதிரியான சமயங்களில் இதனை எப்படி சமாளிப்பது. இதனை எப்படி சரி செய்வது, வாருங்கள் பார்க்கலாம்.

என்ன செய்வது?

என்ன செய்வது?

இது குறித்து ரிசர்வ் வங்கி CICsகளால் வழங்கப்படும் கடன் அறிக்கைகளில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யவும், கண்கானிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. CICsகளால் பிரச்சனை ஏற்படுமாயின், ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறை தீர்ப்பு திட்டத்தின் (RB – IOS) 2021, கடன் தகவல் நிறுவனங்களுக்கு எதிரான இத்தகைய குறை அல்லது பிழைகளை பதிவு செய்யலாம்.

ஆம்பட்ஸ்மேன் திட்டம்
 

ஆம்பட்ஸ்மேன் திட்டம்

ரிசர்வ் வங்கி இண்டகிரேடட் ஆம்பட்ஸ்மேன் திட்டம் என்பது CIC-க்களுக்கு எதிரான குறைகளுக்கு செலவில்லாத மாற்று தீர்வு வழிமுறையை வழங்கும் என்று வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தை சரியாக செயல்படுத்த CIBIL, CRIF, High mark, Equuifax மற்றும் EXperian ஆகியவற்றையும் சரியாக செயல்படுத்த வேண்டும்.

எப்போது பிரச்சனை தீர்க்கப்படும்

எப்போது பிரச்சனை தீர்க்கப்படும்

தற்போது CIC-களுக்கு எதிராக புகார்கள் எதிராக புகார்கள் உள்ளவர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும், அந்த புகார்களுக்கு பதிலளிக்க தவறினால் அதனை கட்டத்திற்கு எடுத்து செல்ல சரியான வழி இல்லை. ஆனால் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பு இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

இந்த புகார்கள் குறித்து அதிகாரிகள் தரப்பு ஏற்றுக் கொண்டவுடன், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கிரெடிட் ஸ்கோர் குறைஞ்சிருக்கா.. இந்த 5 முக்கிய விஷயங்களில் கவனமா இருங்க..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What to do if you have a bad credit score?

What to do if you have a bad credit score?/கிரெடிட் ஸ்கோர் தவறா இருக்கா.. என்ன செய்ய வேண்டும்?

Story first published: Monday, August 15, 2022, 17:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.