சட்டை பட்டனை கழட்டிவிட்டு காற்றுவாங்கும் டிடி.. சொக்கிப்போன ரசிகர்கள்!

சென்னை : விஜய் டிவி தொகுப்பாளர் டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி. அவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அதை பார்ப்பதற்கே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் காத்திருக்கும். அந்த அளவுக்கு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

டிடி தற்போது அதிகம் நிகழ்ச்சிகளில் வருவதில்லை என்றாலும் பட விழாக்கள் போன்ற ஷோக்களில் அதிகம் பங்கேற்று வருகிறார் அவர்.

டிடி

கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்லும் அவரது ஸ்டைலுக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. பக்கா எண்டெர்டெய்னரான டிடிக்கு பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி பிரபலங்களுடனும் நல்ல நட்புறவை கொண்டுள்ளார் டிடி.

திரைப்படங்களில்

திரைப்படங்களில்

விஜய் ஆஸ்தான தொகுப்பாளியான டிடி, தொகுப்பாளராக மட்டுமின்றி நடிகையாகவும் உள்ளார். விசில், பா பாண்டி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் மற்றும் ஜோஷ்வா இமைபோல் காக்க ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் டிடி. இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன.

கட்டிபிடித்தபடி

கட்டிபிடித்தபடி

டிடி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள டிடி அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் ஷாருக்கானை கட்டிபிடித்தபடி இருந்த போட்டோவை ஷேர் செய்திருந்தார். நயன்தாராவின் குளோஸ் தோழியான டிடி, விக்கி – நயன் கல்யாணத்தில் கலந்து கொண்டார். அப்போது ஷாருக் கானை “நான் அவரை இறுகக் கட்டிப்பிடித்து, நான் சொல்ல நினைத்த அனைத்தையும் அவரிடம் சொன்னேன் என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது.

செம போஸ்

செம போஸ்

இந்நிலையில், செம ஸ்டைலாக சட்டை பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஸ்லிஸ் கண்ணாடி போட்டுக்கொண்டு கையில், காஃபி கப்புடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உச்சுக்கொண்டு டிடியை ரசித்து ரசித்து பார்த்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.