சென்னை:
ஆகஸ்ட்
5ம்
தேதி
வெளியான
‘சீதா
ராமம்’
திரைப்படம்
இன்னும்
திரையரங்குகளில்
வெற்றிகரமாக
ஓடிக்
கொண்டிருக்கிறது.
Ramam
Movie
Review
|
Yessa
?
Bussa
?|
Sita
Ramam
|Dulquer
Salmaan|*Review
அதேபோல்
கடந்த
வாரம்
விருமன்,
லால்
சிங்
சத்தா,
ரக்ஷா
பந்தன்
படங்கள்
திரையரங்குகளில்
வெளியாகின.
இந்தப்
படங்கள்
பாக்ஸ்
ஆபிஸில்
இதுவரை
எவ்வளவு
வசூலித்துள்ளன
என
பார்க்கலாம்.
வசூல்
மழையில்
சீதா
ராமம்
துல்கர்
சல்மான்,
மிருணாள்
தாகூர்,
ராஷ்மிகா
மந்தனா
ஆகியோர்
நடித்திருந்த
‘சீதா
ராமம்’
படம்,
கடந்த
5ம்
தேதி
திரையரங்குகளில்
வெளியானது.
ஹனு
ராகவபுடி
இயக்கியிருந்த
இப்படம்,
தமிழ்,
தெலுங்கு,
மலையாளம்
உள்ளிட்ட
மொழிகளில்
வெளியிடப்பட்டது.
காதல்
பின்னணியில்
உருவாகியிருந்த
இப்படத்திற்கு,
ரசிகர்களிடம்
நல்ல
வரவேற்பு
கிடைத்தது.
இந்நிலையில்,
கடந்த
10
நாட்களில்
‘சீதா
ராமம்’
படம்
50
கோடிகளை
வசூலித்துள்ளதாக,
படக்குழு
அதிகாரப்பூர்வமாக
அறிவித்துள்ளது.
தடுமாறிய
லால்
சிங்
சத்தா
இந்தியில்
அமீர்
கான்
நடிப்பில்
உருவான
‘லால்
சிங்
சத்தா’
திரைப்படம்,
கடந்த
வாரம்
வெளியானது.
அமீர்
கானுடன்
கரீனா
கபூர்,
நாக
சைத்தன்யா
உள்ளிட்டோர்
நடித்திருந்த
இப்படம்,
ஹாலிவுட்டில்
வெற்றி
பெற்ற
‘ஃபாரஸ்ட்
கம்ப்’
படத்தின்
ரீமேக்காக
வெளியாகிருந்தது.
வெளியாகும்
முன்பே
பாய்காட்
பிரச்சினையை
சந்தித்த
அமீர்
கான்,
தொடர்ந்து
ப்ரோமோஷன்
நிகழ்ச்சிகளில்
பிஸியாக
இருந்தார்.
ஆனாலும்
வசூலில்
தடுமாறியுள்ள
‘லால்
சிங்
சத்தா’
வசூல்,
50
கோடியை
நெருங்கியுள்ளது.
இது
முந்தைய
அமீர்
கானின்
படங்கள்
செய்த
வசூலை
விட
ரொம்ப
குறைவு
என
தகவல்கள்
தெரிவிக்கின்றன.
அக்சய்குமாரின்
ரக்ஷா
பந்தன்
பாலிவுட்டின்
இன்னொரு
முன்னணி
நடிகரான
அக்சய்
குமார்
நடிப்பில்
‘ரக்ஷா
பந்தன்’
படம்,
கடந்த
வாரம்
வெளியானது.
அண்ணன்,
தங்கை
பாசத்தை
பின்னணியாகக்
கொண்டு
உருவான
இத்திரைப்படத்தை
ஆனந்த்
எல்.
ராய்
இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம்
இதுவரை
28
கோடி
வசூலித்துள்ளதாக,
படக்குழு
அறிவித்துள்ளது.
இதற்கு
முன்
அக்சய்
குமார்
நடிப்பில்
வெளியான
‘சாம்ராட்
பிருத்விராஜ்’
படு
தோல்வியை
சந்தித்தது.
அதை
ஒப்பிடும்
போது
இந்த
வசூல்
நியாயமானதே
என,
அக்சய்
குமார்
ரசிகர்கள்
கூறி
வருகின்றனர்.
கார்த்தியின்
விருமன்
வசூல்
தமிழில்
கார்த்தியின்
‘விருமன்’
திரைப்படம்,
மிகுந்த
எதிர்பார்ப்புகளுடன்
வெளியானது.
முத்தையா
இயக்கிய
இப்படத்தை
சூர்யா
தயாரித்திருந்தார்.
கார்த்திக்கு
ஜோடியாக
அதிதி
ஷங்கர்
அறிமுகமானார்.
கிராமத்துப்
பின்னணியில்
வெளியான
இப்படத்திற்கு,
கலவையான
விமர்சனங்களே
கிடைத்து
வருகின்றன.
ஆனாலும்,
வசூலில்
குறைவைக்காத
‘விருமன்’
வசூல்
இதுவரை
30
கோடியை
கடந்துள்ளது.
மேலும்
வரும்
வாரத்திற்குள்
50
கோடியை
தாண்டிவிடும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.