ஆசியா பசிபிக் பகுதியில் உள்ள சிறந்த 200 நடுத்தர வணிகங்களின் பட்டியலை போர்ப்ஸ் ஆசியா, அதன் 2022 பதிப்பில் கடந்த வாரம் வெளியிட்டது.
இவை 1 பில்லியனுக்கும் குறைவான வருடாந்திர வருவாய் கொண்ட பொது வர்த்தகம் செய்யப்படும் வணிகங்கள், நடப்பு ஆண்டில் 26 நிறுவனங்களில் இருந்து, 24 நிறுவனங்களாக குறைந்துள்ளது.
ஆசிய நாடுகளை பொறுத்தவரை இது இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. பட்டியலில் 22 நிறுவனங்களைக் கொண்டிருந்த சீனாவை விட ஒரு இடம் முன்னேறியுள்ளது. 30 இடங்களுடன் தாய்வான் முதலிடத்தில் உள்ளது. இதே ஜப்பான் 29 நிறுவனங்களையும், தென் கொரியா 27 நிறுவனங்களுடன் உள்ளன.
சரிவில் உலக பங்குச் சந்தைகள்! ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா வரை முக்கிய பங்கு சந்தைகளின் நிலவரம் என்ன?

பட்டியல்
ஆசிய பசிபிக் பகுதியில் 20,000-க்கும் மேற்பட்ட பொது வர்த்தக வணிகங்களின் நீண்ட பட்டியலிலிருந்து தர வரிசைப்படாத பட்டியல் உருவாக்கப்பட்டது. ஆண்டு வருமானம் 10 மில்லியனுக்கும் அதிகமாக, ஆனால் 1 பில்லியனுக்கும் குறைவாக உள்ளது.

சராசரி வருவாய்
இது மிக சமீபத்திய நிதியாண்டின் ஒரு மற்றும் மூன்று ஆண்டு காலகட்டங்களில் கடன், வருவாய் மற்றும் பங்குக்கான வருவாய் மற்றும் ஈக்விட்டிக்கான வலுவான வருவாய், ஐந்தாண்டு சராசரி வருவாய், ஆகியவற்றின் மூலம் சேகரிப்பட்ட தரவினை பயன்படுத்தி, ஒரு மதிப்பினை உருவாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஆதிக்கம் செலுத்திய நிறுவனங்கள்
இந்த ஆண்டு ஒரு பில்லியனுக்கும் கீழ் உள்ள சிறந்த பட்டியல், கடந்த ஆண்டு பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நிறுவனங்களின் நுகர்வோர் செலவினங்களின் பட்டியலில் ஏற்பட்ட மாற்றத்தினை காட்டுகின்றது. இது கொரோனா காராணமாக பாதிக்கப்பட்டது.

இயல்பு நிலையில் உள்ள வணிகம்
பேஷன் டிசைனர்கள், மால் உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், பொதுபோக்கு வணிகங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் ஆடம்பர பிராண்ட் டீலர்கள் அனைவரும் இயல்பு நிலை திரும்பிக் கொண்டுள்ள நிலையில், பயனடைய தொடங்கியுள்ளனர்.

மீண்டு வரும் வணிகம்
தற்போது கொரோனா காரணமாக சீர்குலைந்திருந்த சப்ளை சங்கிலியானது சீர்படத் தொடங்கியுள்ளது. இதனால் பல நிறுவனங்களும் நல்ல வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளன. டாலர் இண்டஸ்ட்ரீஸ் தொடர்பான நிறுவனங்கள் விற்பனையில் 30% ஏற்றம் கண்டுள்ளது. வருவாயில் 72% வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக ஆடைத் துறையில் நல்ல வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது.

ஆடை நிறுவனம்
கொல்கத்தாவினை அடிப்படையாகக் கொண்ட டாலர் இண்டஸ்ட்ரீஸ், 1972ல் தொடங்கப்பட்டது. இது பல ஆடை பிராண்டுகள் மற்றும் உள்ளாடைகளை உற்பத்தி செய்கிறது. இதன் சந்தை மதிப்பு 389 மில்லியன் வருவாய் ஆக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 181 மில்லியனாக இருந்தது. இதன் நிகர வருமானம் 20 மில்லியன் டாலராகும்.

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு நிறுவனம் ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். மருந்துகள், வேளாண் பொருட்கள், பாலிமர்கள், சேர்க்கைகள், நிறமிகள் மற்றும் சாயங்கள் ஆகியவற்றின் கீழ்நிலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்காளை AIL தயாரித்து வருகின்றது. இது உலகளாவிய அளவில் சேவை செய்யும் ஒரு நிறுவனமாக இருந்து வருகின்றது. இது அதிநவீன உற்பத்தி வசதிகளுடன் கூடிய உலகளாவிய நிறுவனமாக மாறியுள்ளது.

தி ஹவர் கிளாஸ்
தி ஹவர் கிளாஸ் நிறுவனம் முந்தைய ஆண்டினை காட்டிலும் கிளாஸ் விற்பனை 40% அதிகரித்து, 766 மில்லியன் டாலாராக அதிகரித்துள்ளது. அதேசமயம் நிகரலாபம் 86% அதிகரித்து, 115 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது ஆசியா பசிபிக் முழுவதும் 50 கடைகளைக் கொண்டுள்ளது. ரோலக்ஸ், படேக் பிலிப் மற்றும் ஆடெமர்ஸ் பிகுவெட் போன்ற பிராண்டுகளை விற்பனை செய்கிறது. கடந்த வாரத்தில் பங்கு சந்தையில் அதன் மதிப்பு 1.12 பில்லியன் டாலர்களாக இருந்தது.

செமிகண்டக்டர் சார்ந்த நிறுவனம்
இந்த பட்டியலில் உள்ள மற்றொரு சிங்கப்பூர் நிறுவனம் UMS ஹோல்டிங்ஸ் ஆகும். இது செமிகண்டக்டர் தொழிலை ஆதரிக்கும் துல்லியமான இன்ஜினியரிங் மற்றும் உற்பத்தி தீர்வுகளை வழங்குகிறது.

சிங்கப்பூர் நிறுவனம்
டிசம்பர் 21, 2021ல் முடிவடைந்த ஆண்டுக்கான பங்குதாரர்களுக்கு கூறப்படும் UMSன் நிகரலாபம் 46% அதிகரித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு 38.7 மில்லியன் டாலர் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 65% அதிகமாகும். இந்த முந்தைய வார இறுதியில் அதன் சந்தை மூலதனம் 592 மில்லியன் டாலராக இருந்தது.
India beats China in the list of medium-sized businesses under a billion
India beats China in the list of medium-sized businesses under a billion/சீனாவை வீழ்த்திய இந்தியா.. எப்படி தெரியுமா?