சுகம் தரும் சுதந்திரம்
*ஏழைகளுக்கு எல்லா வாய்ப்பும்
கிடைத்தால் சுதந்திரம் சுகமே!
*பெண் சிறுமியர்
பயமில்லாமல்
தெருக்களில் விளையாடினால்
சுகமே!
*பிச்சை காரர்கள்
இல்லாத தேசமாக இருந்தால் சுகமே!
*நடு நிசியில்
நடுந்து செல்லும்
பெண் பாதுகாப்பாக
இருந்தால் சுகமே!
*பாதுகாப்பான குடிநீரும் உணவும்
அனைவருக்கும்
கிடைத்தால் சுகமே!
* மனு நீதி சோழன் போல
மக்களுக்கு நீதி* தந்தால் சுகமே!!!
*அஹிம்சை ஆயுதத்தை அனைவரும் வைத்து கொண்டால் சுகமே!
*அண்டை நாட்டினர்
அன்பு காட்டினால்
சுகமே!
*அரசு அலுவலகம்
தராசு போல செயல் பட்டால் சுகமே!
* மாணவர்கள் நம்
மண்ணுக்கு பெருமை
சேர்த்தால் நலமே!
* எல்லா இடமும் குப்பை இல்லா இடமாக இருந்தால் நலமே!
*எழுத்தாளனுக்கு
நினைத்ததை எழுத
சுதந்திரம் கிடைத்தால், சுகமே!
*இயற்கையை பாதுகாத்தால் இன்னும் சுகமே!
*அரசியலமைப்பை
நம் நாட்டின் புனித புத்தகமாக அறிவித்தால் சுகமே!
* என்ன சாதி எனும் கேள்வி
எதிலும் இல்லாதிருந்தால் சுகமே!
* மதங்களனைததும்
” மனிதம்” மட்டும் பார்த்தால் அதுவே சுகம்!!!
* அனாதை,முதியோர்
இல்லங்கள் தேவைப்படா திருந்தால்,சுகமே!!!
* விவசாயி வட்டிக்கு
வாங்காதிருந்தால் சுகமே!
*நூறு சதம் கல்வி அறிவு பெற்றால்
இன்னும் ,,இன்னும்
சுகமே!
* சாராயமும்,சாதி சங்கங்களும் இல்லாதிருந்தால்
இனிமையான சுகமது!!!
* அனைவருக்கும் சொந்த வீடு இருக்குமானால்
அதுவே நல்ல சுகம்!!!
*வல்லரசாகும் முன்
இப்படி நல்லரசானால்
இன்னும் சுதந்திரம் சுகமே!!!!!
பா.தேவிமயில் குமார்