*ஜேர்மன் நதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.
*போலந்து நாடு வழியாக பாய்ந்து வரும் இந்த நதியில் கொட்டப்படும் ரசாயனங்களே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது
ஜேர்மனி மற்றும் போலந்து நாடுகளின் வழியாக ஓடும் நதியொன்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் நிலையில், அந்த தண்ணீருக்கருகில் செல்லவேண்டாம் என பொதுமக்களை ஜேர்மன் அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
ஜேர்மனியிலுள்ள Schwedt நகர்ப்பகுதியில் ஓடும் Oder நதியின் கரையோரமாக ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. அவை போலந்து நாட்டிலிருந்து அடித்துவரப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
image – pagegoo.com
போலந்து அதிகாரிகள் இது குறித்து தங்களுக்கு அறிவிக்கவில்லை என ஜேர்மன் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், பின்விளைவுகளைக் குறித்து அறிந்திருந்தும், நதியில் வேண்டுமென்றே பெருமளவிலான ரசாயனக் கழிவுகள் கொட்டப்பட்டதாலேயே மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என போலந்து பிரதமர் Mateusz Morawiecki தெரிவித்துள்ள நிலையில், இந்த சுற்றுச்சூழல் பேரிடர் தொடர்பில் விசாரணை ஒன்று துவக்கப்படவேண்டும் என ஜேர்மன் சுற்றுச்சூழல் துறை அமைச்சரான Steffi Lemke வலியுறுத்தியுள்ளார்.