நியூயார்க் : டாய்சே வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், இந்தியருமான அனுஷ் ஜெயின், 59, புற்றுநோயால் காலமானார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பிறந்தவர் அனுஷ் ஜெயின். டில்லி பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை ஹானர்ஸ் பட்டம் பெற்றவர், அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலையில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றார். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அனுஷ் ஜெயின், ஐரோப்பிய நாடான ஜெர்மனியை தலைமையிடமாக உடைய டாய்சே வங்கியில் 1995ல் சேர்ந்தார்.
கடந்த, 2012 – 15 வரையில், அந்நிறுவனத்தின் இரண்டு தலைமை செயல் அதிகாரிகளில் ஒருவராக பதவி வகித்தார்.அதன் பின், ‘கான்டார் பிட்ஸ்ஜெரால்ட்’ என்ற சர்வதேச நிதி சேவை நிறுவனத்தின் தலைவராக பணியாற்றினார். இவரது வயிற்றில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது 2017ல் தெரியவந்தது. அப்போது முதல் சிகிச்சை பெற்று வந்த அனுஷ், பெற்றோர், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிரிட்டனின் லண்டன் நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அனுஷ் ஜெயின் உயிர் பிரிந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement