
டாலடிக்கும் ரத்தினமே – நயனை வர்ணிக்கும் விக்கி
சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்த நயன்தாரா, தற்போது அவருடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்தபடி பல ரொமான்டிக் போட்டோக்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்து வருகிறார். நயன்தாராவின் சில போட்டோக்களை பகிர்ந்து ‛டாலடிக்கும் ரத்தினமே மினுமினுக்கும் முத்தாரமே' என காத்துவாக்குல ரெண்டு காதல் பட பாடல் வரிகளை பதிவிட்டு வர்ணித்துள்ளார். இதற்கு ரசிகர்களும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இரண்டாவது ஹனிமூன் கொண்டாட்டமா என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இவர்கள் இருவரின் ரொமான்ட்டிக் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.