தேசிய ஆசிரியர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுதந்திர தின உரையில் 1-7-2022 முதல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு 3% உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளதை முழுவதும் வரவேற்க இயலவில்லை.
மத்திய அரசானது பணவீக்கம் மற்றும் விலைவாசிப்புள்ளிகளின் அடிப்படையில் தனது ஊழியர்களுக்கு 1-1-2022 முதல் 34% அகவிலைப்படி வழங்கி வருகிறது அதற்கு முன் 1-7-2021 முதல் 31 % அகவிலைப்படியினை வழங்கி வந்தது ஆனால் தமிழக அரசோ 6 மாதம் காலம் தாழ்த்தி 1-1-2022 முதல் வழங்கிவிட்டு தற்போதைய அகவிலைப்படியினையும் 6 மாதம் காலம் தாழ்த்தி 1-7-2022வழங்குவது ஒரு புது நடைமுறை உருவாக வழிவகுக்கிறது என்பது மட்டுமன்றி மத்திய அரசுக்கு இணையானது என்பது உண்மைக்கு மாறானதும் ஆகும்.
ஆகவே தமிழக முதல்வர் உடனடியாக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை 1-1-2022 முதல் வழங்க உத்தரவு இட வேண்டும் எனவும் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு ஆகியவை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கேட்டுக்கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.