‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‛திருச்சிற்றம்பலம்'. நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர் . 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு அனிரூத் இசைமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாக உள்ளது . சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது . டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ் இப்படத்தை படக்குழுவினருடன் பார்த்துள்ளார் . மேலும் ரசிகர்களுக்கு இப்படத்தை காண்பிக்க தயாராக உள்ளதாக இயக்குனர் மித்ரன் ஜவஹர் தெரவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.