தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு பட்டாசு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மூன்றாவது மாநில மாநாடு சிவகாசியில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு வணிகர்கள், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், சிவகாசி காங்கிரஸ் எம்எல்ஏ அசோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், பட்டாசுக்கான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதமாகக் குறைப்பது உள்ளிட்ட, பட்டாசு வர்த்தகம் குறித்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுளிடம் முன்வைத்து, 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM