தீர்ப்புகளை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிக்க கூடாது| Dinamalar

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, வரும் 27ல் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்கஉள்ளார். அவர் கூறியதாவது:

சமீபகாலமாக நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் வாயிலாகவும், உத்தரவின் வாயிலாகவும் தான் பேசுகின்றனர். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளை விமர்சிக்க எந்த ஒரு நபருக்கும் உரிமை உள்ளது. அவர் அளிக்கும் தீர்ப்பு, அதில் அவரது பார்வை ஆகியவற்றை விமர்சிக்கலாம்.

தீர்ப்புகளில் நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கு எதிர் கருத்து கூட கூறலாம். அதேநேரத்தில் நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை ஏற்க முடியாது. குறுகிய காலம் பதவியில் இருந்தாலும் அதிகமான வழக்குகளுக்கு தீர்வு காண முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.