நீங்க ஒன்னும் பரமாத்மா கிடையாது… பாத்து நடந்துக்கோங்க- கொந்தளித்த சீமான்!

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கடல் தீபனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கடல் தீபனின் உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்

மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது இலங்கையில் சீனக் கப்பல் வருகை குறித்த கேள்விக்கு, இறுதிப் போரின் போதே சீனா இலங்கைக்குள் வந்துவிட்டது. வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி தருகிறோம் என்று கூறி உள்ளே நுழைந்துவிட்டனர்.

தற்போது சீனக் கப்பல் வருவது பற்றி இந்தியாவிற்கு தெரியும். ஆனால் இந்தியாவால் தடுக்கவோ, எதிர்க்கவோ முடியவில்லை. இலங்கையை பொறுத்தவரை பவுத்த நாடு என்ற வகையில் சீனா பக்கம் தான் நிற்கும். எனவே சீனாவின் தலையீடு என்பது இந்தியாவிற்கு பேராபத்தான நிலை தான். ஆகையால் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவது, பயிற்சி கொடுப்பது போன்ற விஷயங்களை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அடுத்து போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பேசுகையில், இதை விற்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினால், டாஸ்மாக் மதுபானங்கள் விற்பவர்களின் சொத்துகளை யார் பறிமுதல் செய்வது? அரசு சார்ந்தவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் மது தயாரிக்கிற சூழலில் அரசு இது போன்ற கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.

ஆந்திரா அரசு கொற்றலை ஆற்றில் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என முதல்வர் கடிதம் எழுதி இருப்பதை வரவேற்பதாக கூறினார். ஆனால் அதானி துறைமுகம் கட்டுகிறேன் என பெரிய மதில் சுவர் எழுப்பி ஆற்றில் தண்ணீர் போகாமல் தடுத்ததை ஆய்வு செய்தீர்களா? முதலில் அதை செய்யாமல் கடிதம் எழுதி என்ன பயன் வரப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

கச்சத்தீவு மீட்பது குறித்து அண்ணாமலை பேசியிருப்பது பற்றி கேள்வி எழுப்புகையில், மீட்க வேண்டும் என்று நான் தான் கூற வேண்டும். அவர் முழு அதிகாரத்தை வைத்துக் கொண்டு இப்படி பேசுவது சரியாகாது. அவரென்ன டப்பிங் ஆர்டிஸ்டா? எனக் கேட்டார். பத்திரிகையாளர்களின் மண்டையை உடைத்துவிடுவேன் என்று பேசியது பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு, நாங்கள் என்ன தினமுமா அப்படி பேசிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கென்று பண்புகள் இருக்க வேண்டும். பத்திரிகையில் சேர்ந்துவிட்டால் நீங்கள் ஒன்றும் பரமாத்மா கிடையாது. எல்லா பத்திரிகையாளர்களிடமும் அப்படி பேசக்கூடிய நிலை வந்ததா? பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.