பாட்னா: பீஹாரில் இன்று முதல்வர் நிதிஷ் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
பீஹாரில் பா.ஜ.,வுடனான கூட்டணியில் இருந்து, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது. இதையடுத்து லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஏற்பட்டது. இக்கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைத்தன. முதல்வராக நிதிஷ் மீண்டும் பதவியேற்றார். அவருடன் ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் தேஜஸ்வி யாதவும் துணை முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் நிதிஷ்குமார் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் பெருமளவு நிதிஷ் அமைச்சரவையில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு இன்று காலை 11.30 மணியளவில் கவர்னர் பதவிபிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
பாட்னா: பீஹாரில் இன்று முதல்வர் நிதிஷ் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.பீஹாரில் பா.ஜ.,வுடனான கூட்டணியில் இருந்து, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது. இதையடுத்து லாலு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்