பெரியாரின் சிலையை உடைக்க சொன்ன கனல் கண்ணன் கைது

மதுரவாயலில் கடந்த ஒன்றாம் தேதி நடந்த கூட்டமொன்றில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், பிரபல சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஸ்ரீரங்க கோயிலுக்கு முன் இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் உண்மையான எழுச்சி நாளாக இருக்கும் என்றார். அவரது இந்தப் பேச்சு மிகப்பெரிய விவாதமாக மாறியது. மேலும் அவரை கைது செய்ய வேண்டுமென்றும் பலரும் வலியுறுத்தினர்.

சூழல் இப்படி இருக்க, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் கனல் கண்ணனுக்கு எதிராக புகார் அளித்தார். அந்தப் புகாரில், “2006 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் கலவரம் உண்டானது. அந்த சம்பவம் முடிந்து சுமார் 15 ஆண்டுகள் ஆனநிலையில் தற்பொழுது மீண்டும் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல் கண்ணன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. 

அதேபோல் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கலவரத்தை தூண்டும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.  மேலும், இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கனல்கண்ணன் பேசியுள்ளதால் அவர் மீதும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, கனல் கண்ணன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய, அவர் தலைமறைவானார். சென்னையில் இருக்கும் அவரது வீடுகளில் தேடி கிடைக்காத அவர் பாண்டிச்சேரியில் தனியார் சொகுசு விடுதி ஒன்றில் இருப்பதாக சைபர் க்ரைம் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.தொடர்ந்து பாண்டிச்சேரிக்கு விரைந்த சைபர் க்ரைம், அங்கு தலைமறைவாகியிருந்த கனல் கண்ணனை அதிரடியாக கைது செய்தது.

முன்னதாக, கனல் கண்ணன் முன்ஜாமின் கேட்டு கனல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கடந்த 11ஆம் தேதி விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.