மடாகஸ்கர் நாட்டிற்கு 15 ஆயிரம் சைக்கிள்களை வழங்கியது இந்தியா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஆண்டானாரிவோ: இந்திய சுதந்திர தினத்தையொட்டி, மடாகஸ்கர் நாட்டிற்கு இந்தியா 15 ஆயிரம் மதிவண்டியை (சைக்கிள்) நன்கொடையாக வழங்கியது.

இன்று நாடு முழுவதும் சுதந்திர தின பவள விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் நட்பு நாடான மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை நன்கொடையாக இந்தியா வழங்கியுள்ளது.

latest tamil news


இந்தியா அனுப்பி வைத்த சைக்கிளை மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே, மடகாஸ்கர் நாட்டிற்கான இந்திய தூதர் அபய் குமாரும், ஆகிய இருவரும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, மடகாஸ்கர் தலைநகர் அண்டனானரிவோவில் இந்திய தூதரக கட்டிடம் இந்திய மூவர்ண விளக்குகளால் ஜொலித்தது. அங்கு இந்திய தூதர் அபய் குமார் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.