உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், கணவன் மனைவி இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் விகேசி மகால் எதிரில் உசிலம்பட்டியிலிருந்து மதுரை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதில் இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை மேல பொன்னகரத்தைச் சேர்ந்த மோகன் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் இருவரும் தலை நசுங்கி நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அரசு பேருந்து ஓட்டுநர் சந்தானம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சாலை விபத்தில் உயிரழந்த இருவரும் உசிலம்பட்டியில் தமது உறவினர் இறப்பிற்கு ஆறுதல் தெரிவிக்க வந்துவிட்டு மீண்டும் மதுரை நோக்கி சென்ற போது விபத்தில் உயிரிழந்தது போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
