கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமிக்க பல்வேறு வழிகள் உள்ளது என்பதும் அவற்றில் முக்கியமானது மியூச்சுவல் பண்ட் என்பதும் அனைவரும் அறிந்ததே.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது என்பதும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை, பிக்சட் டெபாசிட் ஆகியவைகளை விட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பதால் இதில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 இன் 1 திட்டம்.. யூலிப் திட்டத்தில் SIP வருமானம் 26%.+ இன்சூரன்ஸ்.. யோசிக்க வேண்டிய திட்டம் தான்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
பங்குச்சந்தை என்பது ரிஸ்க்கான முதலீடு என்பதும் அதே நேரத்தில் பிக்சட் டெபாசிட் போன்ற முதலீடுகள் குறைந்த வட்டியை தரும் என்பதால் 10 முதல் 12 சதவீதம் வரை வருமானம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வகை முதலீடுகள்
லம்ப்சம் என்று கூறப்படும் மொத்தமாக முதலில் செய்யும் முறை மற்றும் மாதாமாதம் முதலீடு செய்யும் SIP ஆகிய இரண்டு வகை மியூச்சுவல் முதலீடுகள் உள்ளன என்பதும் இரண்டிலுமே மக்கள் பெருவாரியான அளவில் முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய முதலீட்டாளர்கள்
இந்த நிலையில் புதிதாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து செய்ய விரும்புபவர்கள் SIP அல்லது லம்ப்சம் என்ற இரண்டில் எதில் செய்வது என்பதில் குழப்பம் இருக்கும். இந்த இரண்டில் உங்களுக்கு எது சரியானதாக இருக்கும் என்பதை முடிவு செய்து முதலீடு செய்யலாம்.

SIP முதலீடு
ஒரு இலக்கை அடைவதற்காக வழக்கமான முறையில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் உங்களுக்கு SIP முறைதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஒரு நல்ல ஈக்விட்டி திட்டத்தில் முதலீடு செய்து மாதம் மாதம் ஒரு தொகையை நீங்கள் சேமித்தால் ஒரு சில குறிப்பிட்ட வருடங்கள் கழித்து உங்களுக்கு மொத்தமாக மிகப் பெரிய தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செலவு
அதேபோல் நீண்ட காலத்தில் உங்களது குழந்தையின் உயர்கல்வி, குழந்தையின் திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்கு SIP முதலீடு பொருத்தமானதாக இருக்கும். தேவைப்படும் பட்சத்தில் ஒரு நிதி ஆலோசகரின் உதவியையும் நீங்கள் பெற்று கொள்ளலாம்.

லம்ப்சம் முதலீடு
இந்த நிலையில் போனஸ், சொத்து விற்பனை செய்ததால் கிடைக்கும் தொகை அல்லது ஓய்வு காலத்தில் கிடைக்கும் தொகை என பெரிய தொகை கிடைத்தால் அந்த பணத்தை என்ன செய்வது என்று நீங்கள் யோசிக்கலாம். இந்த நிலையில் டெப்ட் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் மொத்தமாக முதலீடு செய்யும் லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து அதிலிருந்து வட்டியை பெற்றுக்கொள்ளலாம். பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் மொத்தமாக முதலீடு செய்யும் முதலீடுகளுக்கு டெப்ட் ஃபண்ட்கள் பொருத்தமானவை என்று கூறிவருகின்றனர்.

நிதி ஆலோசகர்
நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதல்முறையாக முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு பொருத்தமானது SIP முறையா? அல்லது மொத்தமாக முதலீடு செய்யும் முறையா? என்பதை உங்களது பொருளாதார நிலைமை மற்றும் இலக்கு ஆகியவற்றை உங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்து ஆலோசித்து உங்களுக்கு எது பொருத்தமானது என்பதை கேட்டு தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள்.

இடையில் நிறுத்தக்கூடாது
SIP முறை என்பது ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து நீண்ட காலத்தில் ஒரு பெரிய தொகையை பெற்றுக் கொள்ளும் முறையாகும். SIP முதலீட்டில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பங்கு மார்க்கெட் இறங்கி விட்டதே என்று நீங்கள் அச்சப்பட்டு முதலீட்டை நிறுத்தக்கூடாது. பங்கு மார்க்கெட் இறங்கினால் நீங்கள் வாங்கும் NAV எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதும் பங்கு மார்க்கெட் ஏறும்போது அது உங்களுக்கு மிகப்பெரிய லாபத்தை தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்ல லாபம்
அதேபோல் சந்தை ஏறுமுகமாக இருந்து தொடர்ந்து சந்தை ஏறும் என்று நீங்கள் கருதினால் உங்களிடம் உள்ள மொத்த தொகையை தாராளமாக முதலீடு செய்யலாம். இதனால் ஒருசில ஆண்டுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.
How should choose whether go SIP or Lumpsum in Mutual Fund investment
How should choose whether go SIP or Lumpsum in Mutual Fund investment | மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எது சிறந்தது? SIP அல்லது ஒட்டு மொத்த தொகை!