மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் 27% பங்குளை, நாளை கேகேஆர் (KKR) விற்பனை செய்யவுள்ளது.
இதன் மூலம் சுமார் 9000 கோடி ரூபாய் நிதியினை திரட்டவுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய ஈக்விட்டி நிறுவனமான கே கே ஆர் நிறுவனம், அதன் வசம் உள்ள 27% மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்கினை விற்பனை செய்யவுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் 9000 கோடி ரூபாய் நிதியினை திரட்டலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 11 பங்குகளை வாங்கி வைங்க.. 20% வரை லாபம் கொடுக்கலாம்.. நீங்க எதுவும் வாங்கியிருக்கீங்களா?
பங்கு விற்பனை
KKR நிறுவனத்தினை சேர்ந்த கார்ப்பரேஷன் கயாக் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துடன், ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இந்த பங்கு விற்பனையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 அன்று அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் படி, மேக்ஸ் ஹெல்த்கேர் பங்குகளின் அனைத்து 26.7 கோடி பங்குகளை, 350 – 361.9 ரூபாய் என்ற விலை வரம்பில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.80-க்கு வாங்கிய பங்கு
மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவன பங்கின் விலையானது மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ரேடியன்ட் ஆகிய இரண்டும், 2018ம் ஆண்டில் கேகேஆர் நிறுவனத்தால் ரூ.80 ரூபாய்க்கு ஒரு பங்கு வாங்கப்பட்டது.
யாரெல்லாம் வைத்துள்ளனர்
முந்தைய ஆண்டின் ஜூன் மாத இறுதியில் கயாக் இன்வெஸ்ட்மென்ட்ஸ், மேக்ஸ் ஹெல்த்கேரின் 45.63 பில்லியன் பங்குகளை அல்லது 47.24% பங்குகளை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனம் செப்டம்பர் 29, 2021ல் ஓபன் மார்கெட் மூலம் 8.44 கோடி பங்குகளை 2956 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது. இந்த பங்கினை வாங்கியவர்களில் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், வெரிடாஸ் ஃபண்ட்ஸ் பிஎல்சி, ஹெச்ச எஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவையும் அடங்கும்.
ஏற்கனவே விற்பனை
மார்ச் 2022ல் கேகேஆரை சேர்ந்த நிறுவனம் கூடுதலாக 10% வணிகத்தினை 3300 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்தது. இதனை வாங்கியவர்களில் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், பென்ஷன் ஃபண்ட் குளோபல் மற்றும் ஸ்மாலர் கேப் வேர்ல்ட் ஃபண்ட் ஆகியவையும் அடங்கும்.
US KKR to sell its entire 27% stake in max healthcare tomorrow: check full details here
US KKR to sell its entire 27% stake in max healthcare tomorrow: check full details here/மேக்ஸ் ஹெல்த்கேர் பங்கினை விற்பனை செய்யும் KKR.. இனி பங்கு விலை எப்படியிருக்கும்?