பிரிட்டன் பிரதமர் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், முன்னாள் பிரிட்டன் நிதி அமைச்சருமான ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பிரிட்டன் பிரதமர் பதவிக்காக 8 வேட்பாளர்கள் களம் இறங்கிய நிலையில் ஆரம்பத்திலிருந்து முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முன்னிலை வகித்து வருகிறார்.
இவருக்கு போட்டியாக இருக்கும் ஒரே வேட்பாளர் 46 வயதான லிஸ் டிரஸ் என்பதும், இருவருக்கும் இடையில் தான் தற்போது கடுமையான போட்டி உள்ளது என்பதும் கொடுக்கப்பட்டது.
உச்சத்தில் இருந்து பாதாளம் சென்ற 4 பங்குகள்… உங்களிடம் இருக்கா?
பிரதமர் வேட்பாளர்
பிரிட்டனில் செப்டம்பர் 4ஆம் தேதி கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பிரதமர் வேட்பாளரை வாக்களிப்பு மூலம் தேர்வு செய்ய உள்ளனர். இந்த நிலையில் ரிஷி சுனக் இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷி சுனக்
இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் வேட்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக் குறித்த ஒரு செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டன் பிரதமர் தேர்தல் இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாக இருக்கும் நிலையில் முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக் அவர்களின் ஆடம்பர வாழ்க்கை முறை குறித்த செய்தி வெளியாகி மக்கள் மத்தியில் அவர் மீது அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹாட்வாட்டர் நீச்சல் குளம்
ரிஷி சுனக் தனது மாளிகையின் உள்ளே ஒரு ஆடம்பர நீச்சல் குளத்தை அமைத்து வருவதாகவும் ஹாட் வாட்டர் நீச்சல் குளம் என்று கூறப்படும் இதற்காக அவர் இந்திய மதிப்பில் சுமார் 3.8 கோடி ரூபாய் செலவு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் நாட்டில் பல பகுதிகளில் தற்போது வறட்சி மற்றும் கடுமையான பொருளாதார சிக்கல் இருக்கும் நிலையில் இந்த செய்தி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
நீச்சல் குளத்தின் புகைப்படங்கள்
பிரிட்டன் நாட்டின் முன்னணி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் ரிஷி சுனக் தனது மாளிகையில் ஒரு புதிய ஹாட் வாட்டர் நீச்சல் குளத்தை கட்டி வருவதாகவும், இதற்காக அவர் 40 ஆயிரம் பவுண்டுகள் செலவு செய்து வருவதாகவும் கூறியுள்ளது. மேலும் ரிஷி சுனக் கட்டிவரும் நீச்சல் குளத்தின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
ரிஷி சுனக் குடும்பம்
முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி மற்றும் இரண்டு குழந்தைகள் தங்கி இருக்கும் இந்த வீட்டிற்கு ஆடம்பர நீச்சல் குளம் தேவையா? என்பதே பெருவாரியான மக்களின் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றது என்றும் கூறப்படுகிறது.
நீச்சல்குளத்தின் பணிகள்
இந்த ஆடம்பர நீச்சல்குளத்தில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் புகைப்படங்களுடன் கூடிய செய்தி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டன் நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் பல நீச்சல் குளங்கள் தற்போது மூடப்பட்டு வரும் நிலையில் ரிஷி சுனக் குடும்பத்தினருக்காக புதிய நீச்சல் குளம் தேவையா என்ற கேள்வியை ஊடகங்களும், எதிர்க்கட்சி எம்பிக்களும் எழுப்பி வருகின்றனர்.
சர்ச்சை
ரிஷி சுனக் மற்றும் அவரது குடும்பத்தார் மீது சர்ச்சை ஏற்படுவது இது முதல் முறை அல்ல. சில நாட்களுக்கு முன் தன்னுடைய வீட்டிற்கு வந்த பத்திரிகையாளர்களுக்கு ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி விலையுயர்ந்த கோப்பைகளில் தேநீர் அளித்ததும் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
பிரதமராக தேர்வு செய்யப்படுவாரா?
இருப்பினும் ரிஷி சுனக்கின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை பெரிதுபடுத்தாமல் அவருடைய நாட்டை வளமாக்கும் கொள்கைக்காக அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Rishi Sunak In Hot Water Over ₹ 3.8 Crore Swimming Pool Amid Drought In UK!
Rishi Sunak In Hot Water Over ₹ 3.8 Crore Swimming Pool Amid Drought In UK! | ரூ.3.8 கோடியில் ஹாட்வாட்டர் நீச்சல்குளம்… ரிஷி சுனக் மீது மக்கள் அதிருப்தியா?