லிங்க்ட்-இன் ஊழியர்களுக்கே இந்த நிலையா? எங்கே போய் புலம்புவது?

கடந்த சில மாதங்களாக முன்னணி நிறுவனங்கள் பொருளாதார நிலையை காரணம் சொல்லி பல ஊழியர்களை வேலை இழப்பு செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

மைக்ரோசாஃப்ட், கூகுள் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர்.

அவ்வாறு வேலை இழந்தவர்கள் லிங்க்ட்-இன் சமூக வலைத்தளத்தில் புலம்பி வருவதை பார்த்து வருகிறோம். ஆனால் அந்த லிங்க்ட்-இன் நிறுவனத்தில் பணி செய்பவர்களும் தற்போது வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் எங்கே போய் புலம்புவது என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

என்னடா டெஸ்லா.. எங்க டாடா இருக்க என்ன கவலை.. புதிய அவின்யா கார்..!

லிங்க்ட்-இன் ஊழியர்கள்

லிங்க்ட்-இன் ஊழியர்கள்

உலகின் முன்னணி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் தங்களுடைய வேலை போனால் உடனடியாக லிங்க்ட்-இன் தளத்தில் வந்து புலம்புவார்கள். ஆனால் அந்த லிங்க் தளத்தில் உள்ள மார்க்கெட்டிங் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலையிழப்பு

வேலையிழப்பு

சின்ன சின்ன ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் வரை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். செலவுகள் குறைப்பது, பொருளாதார சூழ்நிலையை காரணம் காட்டுவது, மறு சீரமைப்பு என்ற பெயரில் ஊழியர்கள் தற்போது வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 லிங்க்ட்-இன் பதிவு
 

லிங்க்ட்-இன் பதிவு

இந்த நிலையில் வேலை இழந்த ஊழியர்கள் லிங்க்ட்-இன் தளத்தில் தங்கள் வேலை இழப்பு செய்தியையும் இதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் பதிவு செய்வது வழக்கமான ஒன்று. இந்த பதிவை அடுத்து அவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதும், அதே சமயத்தில் அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு லிங்க்ட்-இன் பயனாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லிங்க்ட்-இன் ஊழியர்கள் வேலையிழப்பு

லிங்க்ட்-இன் ஊழியர்கள் வேலையிழப்பு

இந்த நிலையில் லிங்க்ட்-இன் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த ஊழியர்களில் 1% பேர் வேலையிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊழியர்களின் பதிவு

ஊழியர்களின் பதிவு

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை லிங்க்ட்-இன் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும் வேலை இழந்த பலர் தற்போது லிங்க்ட்-இன் சமூக வலைத்தளத்தில் இதுகுறித்த தகவலை பகிர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வரும் அனுப்பி வருவது மற்ற ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LinkedIn lays off entire global events marketing team: Report

LinkedIn lays off entire global events marketing team: Report | லிங்க்ட்-இன் ஊழியர்களுக்கே இந்த நிலையா? எங்கே போய் புலம்புவது?

Story first published: Monday, August 15, 2022, 16:02 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.