முட்டை, இன்று பலருக்கும் பிடித்தமான உணவு. இந்த உணவில் புரதங்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனினும் இந்த உணவை சிலர் ஒதுக்கிவைக்கின்றனர்.
இதற்கிடையில் சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா என்ற கருத்தும் ஐயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நீரிழிவு நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா என்பது குறித்து பார்ப்போம்.
அதற்கு முன்னதாக நீரிழிவு நோய் குறித்து பார்ப்போம். ஏனெனில் உடல் பாகங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்வது போல் நீரிழிவு நோயிக்கும் கொலஸ்ட்ராலுக்கும் இடையே தொடர்பு உள்ளது.
நீரிழிவு நோய் என்பது இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகும். இந்த நீரிழிவு நோயில் டைப்1 மற்றும் டைப் 2 என வகைகள் உள்ளன. அந்த வகையில் முட்டையிலும் கொலஸ்ட்ரால் உள்ளது.
பொதுவாக இந்த கொலஸ்ட்ரால் கெட்டது என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கொலஸ்ட்ராலில் பல வகைகள் உள்ளன. இதில் அடர்த்தி கொலஸ்ட்ரால் நல்லது என்று மென்மையான கொலஸ்ட்ரால்கள் ஆபத்தானவை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது இரத்த அடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் இயற்கையான கொலஸ்ட்ராலை முட்டைகள் கிரகித்துவிடுகின்றன எனக் கூறப்பட்டது.
இதில் உண்மையில்லை என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்படி 12 வாரங்களுக்கு முட்டை சாப்பிட்ட நபர்களுக்கு சர்க்கரையின் அளவு பெரிதளவு அதிகரிக்கவில்லை.
மேலும் தசைகளிலும் வலிமை அதிகரித்து காணப்பட்டது. ஆகவே வாரத்திற்கு 3 முட்டை சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் இதில் தேவைப்பட்டால் மட்டும் மஞ்சள் கரு சாப்பிட்டு கொள்ளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil